பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

தமிழர் வரலாறு

கப்பட்டை, இந்தியக் கப்பல்களில், சோமாலி கடற்கரைக்கு நேரே கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து, அரேபியாவுக்கும், எகிப்துக்கும், சிரியாவுக்கும் கைமாறிற்று, [J.R.A.S. 1910 ; Page : 180-187].

இந்தியாவுக்கும் பழைய எகிப்துக்கும் இடையில், நீலம், மற்றும் பிற வண்ணக் கலவைப் பொருள்களில், நீண்ட கால வாணிகம் இருந்து வந்தது என்பது நன்கு தெரிந்த ஒன்று. [J.R.A.S. 1910 : Page . 204 ] கிறிஸ்து ஆண்டுத் தொடக்கத்திற்குப் பின்னர், இந்தியத் துறைமுகங்களிலிருந்து: நேராகவோ, அல்லது அரேபிய, எகிப்திய இடைத்தரகர்கள் வழியாகவோ, உரோமானியர் பெற்றுக்கொண்ட வேறுபிற. எண்ணற்ற இந்தியப் பண்டங்கள் பற்றிய ஆவணங்கள் நம்மிடையே உள்ளன. இப்பொருள்களின் வணிகப் போக்குவரத்து, மேலும் பழமைவாய்ந்த காலத்திலிருந்தே வழக்காற்றில் இருந்திருக்க வேண்டும். ஆனால், அக்காலத்தைச் சேர்ந்த அகச்சான்று எதுவும் நம்மிடையே இல்லை. இந்திய வாணிகம், அப்பழங்காலத்தில் நடைபெற்றது அரேபியாவுடனும், கிழக்காப்பிரிக்காவுடனுமாம். அது பண்டமாற்று முறையிலேயே நடைபெற்றது. தங்கள் பண்டங்களுக்கு, மாற்றுப் பொருள்களாக இந்தியர்கள், பொன், சாம்பிராணி, குங்கிவியம், நறுமணப் பொருளுக்குப் பயன்படும் பிசின், ஒட்டு மரப்பிசின் ஆகியவற்றைப் பெற்றனர். இத்திய வணிகப் பண்டங்கள், சோமாலிக்கண்ணதான , ஆப்பிரிக்கச் சந்தைகளுக்கும், லொகொத்ர (Socotra) தீவுக்கும், அனைத்திலும் மேலாக, அராபிய இந்திய வணிகர்களின் சந்திப்பு இடமாகவும், பிற்காலத்தில், கிரேக்க வணிகர்களும் வந்து சத்திக்கும் இடமாகவும், வளம்மிக்க, செல்வச் சிறப்பு வாய்ந்த இடமாகவும் அமைந்த அராபிய நாட்டு ஏடனுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. திருவாளர் வார்மிங்டன் குறிப்பிடுவதுபோல், சோமாலிச் சந்தை வணிகர்களாம் அராபிய ஆப்பிரிக்க மக்கள். ‘ஸ்பீசெஸ்’ (Spices) முனையை மையமாகக் கொண்ட இந்திய, அராபிய, ஆப்பிரிக்கக் கப்பல் போக்குவரத்து மூலம், கேம்பே (Cambay) இந்தியர்களோடு, நெடிது, நீண்ட வணிகப்