பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

தமிழர் வரலாறு

மகதத்துடன் வாணிகம் :

கி.மு. நான்காம் நூற்றாண்டில், வட இந்தியாவுக்கும், தென்னிந்தியாவுக்கும் இடையிலான வாணிகம், எப்போதும் இருந்திராத அளவு மிகப்பெரிய அளவினை அடைந்திருந்தது; இது குறித்துக் கெளடில்யர் கூறியன அனைத்தையும், அப்படியே முழுமையாகத் தருகின்றேன். "நிலவழி நெடுஞ் சாலையைப் புொறுத்தமட்டில், இமாலயத்திற்குச் செல்லும் வழி, தஷண பரதத்திற்குச் செல்லும் வழியினும் மேலானது. என்று கூறுகிறார் ஆசிரியர் வெகு தொலைவில் உள்ள முன்னதிலிருந்து, யானைகள், குதிரைகள், நறுமணப் பொருள் வகைகள், தந்தம், தோல், மிகமிக நேர்த்தியான பொன், வெள்ளி அணிகலன்கள் வந்தன. அப்படி இல்லாமல், ஆட்டு மயிர்க்கம்பளங்கள் நீங்கலாக, தோல், குதிரை, சங்குகள், வைரம், நீலம் முதலாம் மாணிக்கங்கள், பொன்னாலான அணிகலன்கள் தஷிண பரதத்திலிருந்து பெருமளவில் வந்தன. என்று கெளடில்யர் கூறுகிறார். தஷிண புரதத்தில், பற்பல சுரங்கங்கள் வழியாக, மிகச் சிறந்த வாணிகம் பொருள்கள் பெருமளவில் கிடைக்கும் நகரங்கள் வழியாக, பல்வேறு வகை மக்களை ஆங்காங்கே கொண்டுள்ள வழியாகச் செல்லும், நீண்ட வழிப்பயணம் செய்வதற்கு எளிமையானது; ஏனைய வழிகளிலும் சிறப்பு வாய்ந்தது." ["ஸ்த்ஹல பாத பி ஹைமவதொ தஷிணாபத்ஹாஎக்ரெயான்--

ஹய்த்யஸ்வ கந்த்ஹ தந்தாஜின ரூப்ய ஸ்வர்ன பன்யாஹ். சாரவத்தராங் இத்யாசார்யஹ்

நெதி கெளடில்யஹ், கம்பலாஜினாஸ்வபன்ய வர்ஜாஹ். சாங்ஹவஜ்ரமணி.முக்தாஹ். சுவர்ணபண்யாஸ்க ப்ரப்ஹுத்ரா, தஷிணாபத்ஹே

தஷிணாபத்ஹே பி பாஹுகனிஹ் சார பண்யஹ் ப்ரசித்த கதிர் அல்பவ்யாயா மொ வா வணிக்பதஹ ஸ்ரெயான்"

[அர்த்த சாஸ்திரம். ஜாலி மற்றும் ஸ்கிமித் வெளியீடு; பகுதி: 2 : 1.2 : பக்கம் : 30-34)