பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

தமிழர் வரலாறு

இருக்கிறேன் என்னோடு பிரியாமல் ஒன்றியிருந்த என் பெண்மை நலனோ என்றால், தினைப்புனம் காத்து நிற்பார் . விடும் கவண் கல்லின் ஒலிகேட்டு அஞ்சி, காட்டு யானை, தான் கைப்பற்றியிருந்த பசிய மூங்கிலைக் கைவிட்டதாக, அம். மூங்கில், மீனைக் கவர்ந்து கொண்ட தூண்டிற்கோல் போல, விரைந்து மேலே எழும் இடமாகிய காட்டு நாட்டானாகிய என் காதலனோடு, நாங்கள் பழகிய அவ்விடத்திற்கு ஒடி விட்டதே !

'

"யானே, ஈண்டையேனே! என் நலனே,
ஏனல் காவலர் கவணொலி வெரீஇக்
கான யானை கைவிடு பசுங்கழை
மீன் எறி துாண்டிலின் நிவக்கும்
கானக நாடனொடு ஆண்டுஒழிந் தன்றே!"

- குறுந்தொகை : 54

ஊர்வம்பு பேசித் திரியும் அயலில் மகளிர், காதலர் குறித்து அம்பல் உரைக்கலாயினர். ஆதலால், அப்பெண்ணின் வளர்ப்புத் தாயாம் செவிலியின் மகளாய், அப்பெண்ணோடு வளர்ந்தவளாய தோழி. "நம் காதலை இனியும் மறைத்துப் பயன் இல்லை, அதை ஊர் அறிய உலகு அறிய உணர்த்தி விடுதலே நலம்" என மறைத்து மொழிகிளவியால் கூறத் தொடங்கினாள்: "மகளே உன் மார்பை விரும்பும் நம் இனிய தலைவன், மலைவளர் சந்தனம் பூசிய மார்பில் முத்துமாலை அணிந்துகொண்டு, சுனையில் வளர்ந்த குவளையின், வண்டுபட விரிந்த மலர்களால் ஆன கண்ணியைத் தலையில் புனைந்துகொண்டு, நம் வீட்டிற்கு நள்ளிரவில் வந்து செல்கின்றான்; அக்காலத்தில், அவன் வந்து செல்லும் வழியில், மன்றங்களில் வாழும் மரையா வெகுண்டு ஓடுமாறு, அதன் ஆனைக் கொன்றுவிட்டு, சிவந்த கண்ணும், கருத்த உடலும் வாய்ந்த புலி முழங்கும். ஆகவே, நம் களவு ஒழுக்கத்தை மறைக்கும் காலம் இதுவன்று; நம் களவு ஒழுக்கத்தைப்