பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

332

தமிழர் வரலாறு

.

லோபா முத்திரையும், திரண தூமாக்கினியும், வெள்ளம் பெருக்கெடுத்தோடும் வைகையைக் கடக்க நேரிட்டபோது, அவள் வெள்ளத்தால் அடித்துச் செல்லாதிருக்கத் தம் கைக்கோலை நீட்டி, அதைப் பற்றிக்கொள்ளுமாறு லோபா முத்திரையிடம் கூறினார். அவ்வாறே ஆற்றைக் கடக்கும் போது, வெள்ளப்பெருக்கு மிகுதியால் கோலில், ஒரு கோல் அளவே இடைவெளி இருக்க நேரிட்டது. அவ்வகையில் திரணதூமாக்கினி ஆசிரியரின் தடையுத்தரவை மீறிவிட்டார். கடுஞ்சினம் உடைய ஆசிரியர், இதைக் கேள்வியுற்றதும், "நீங்கள் இருவரும் சுவர்க்கம் புகக் கடவீர் அல்லராக" எனச் சாபம் இட்டார். அதுகேட்ட மாணவரும் "நாங்கள் செய்யாத பிழைக்கு எங்களைச் சபித்த நீயும் கவர்க்கம் புகக் கடவீர் அல்லராக" என எதிர்ச்சாபம் இட்டார். தொல்காப்பியம் இருக்க அகத்தியம் அழிந்துவிட்டதை விளக்க, இக்கதை கூறப்பட்டது போலும்.