பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

346

தமிழர் வரலாறு

மாலை மாறன்; பாடிய பாடல் : குறுந் : 24 .
 இந்த ஒன்பதின்மர் மட்டுமல்லாமல், பூதப் பாண்டியன் மனைவி, பெருங்கோப்பெண்டு என்பாள் தன் கணவனோடு எரிபுக்க போது புறம் 246 ஐப் பாடியுள்ளாள். அண்டர் என்ற பாண்டிய சிற்றரசன் மகன் குறுவழுதி என்பான், குறுந்தொகை 345, அகம் 150, 228 பாக்களைப் பாடியுள்ளான்.
காலத்தால், தன்னோடு நெருங்கிய தொடர்புடைய, தன் கண்ணெதிரே வைக்கப்பட்டிருக்கும் சங்கப் பாடல்கள் குறித்த, அகப்பொருள் உரையாசிரியர் கூற்றுக்களே, இத்துணைப் பிழையுடையவாயின், முதல் இரு சங்கங்கள் குறித்த அவர் கூற்றும் பிழையுடையவாம் என்பதைப் பெரும் பாலோர் ஏற்றுக்கொள்வர் என நான் எண்ணுகிறேன்.

கட்டுக் கதையில் காணலாம் வரலாற்றுச் செய்திகள் :

இறையனார் அகப்பொருள் உரையாசிரியர், பாண்டிய அரசர்களின் முன்னோர்கள் பற்றிய மரபுவழிக் கதைகளைக் கேட்டிருக்கக்கூடும். அவை முழுவடிவம் பெற, அவற்றோடு, தம் காலத்து நிலவி வந்த சில கட்டுக் கதைகளையும், தாமே கற்பித்துக்கொண்ட சில கட்டுக் கதைகளையும் இணைத் திருக்கக் கூடும். அவரால் மிக மிக நுணுக்கமாகக் கூறப்பட்ட அக்கட்டுக்கதைகளில் பொருத்தமற்ற புனைவுகளைக்களைந்து விட்டு, நிகழ்ந்திருக்கக் கூடிய உண்மைகளை வெளிப் படுத்துவதுஇயலாத ஒன்றன்று.
இந்து ராஜாக்கள், தொடக்க நாளிலிருந்தே தங்கள் அரசப்பரிவாரங்களில் புலவர்களையும் கொண்டிருந்தனர் என்பது தெரிந்த ஒன்று. அரசர்கள், எப்பொழுதும் பாராட்டின் பால் பெருவேட்கையுடையவராவர். அது போலவே கவிஞர்களும், எப்போதும் இறைச்சி உணவின்பால் பெருவேட்கையும், மதுவின்பால் நாவேட்கையும் உடையவராவர். தங்கள் புகழ்பாட, வேதகால அரசர்கள் "சூதர்களையும் தமிழரசர்கள் பாணர்" களையும் கொண்டிருந் தனர்; தமிழரசர்கள், பாணர், பொருநர், கூத்தர் போலும்