பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரை, நாழிகை, பொழுது இவற்றின் பெருக்கமாம் "நாள்' என்பதையும் அறிந்திருந்தனர். ஒருநாள் எழு நாள் போல் செல்லும்சேட் சென்றார் வருநாள் வைத்து ஏங்கு பவர்க்கு (குறள் : 1269) 'நாள் என ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும் வாள்', "விழுப்புண் படாத நாள்: (குறள் : 334, 376) என்ற சொற்றொடர்களைக் காண்க.

. நாட்களை, நேற்று, இன்று, நாளை என எண்ணவும் தெரிந்திருந்தனர். "நெருநல், உளன் ஒருவன் இன்று இல்லை. (குறள் 386) என்ற குறட்பாவினைக் காண்க. காலை, பகல், மாலை, யாமம், விடியல் என ஒரு நாளை ஐந்து கூறுகளாகப் பிரித்துக் காணும் அறிவும் பெற்றிருந்தனர். 'காலையும் பகலும், கையறு மாலையும், ஊர் துஞ்சு யாமமும் விடியலும் என்னும் இப் பொழுதிடைத் தெரியின்' (32) என்ற குறுந்தொகைச் செய்யுளைக் காண்க.

நாளின் பெருக்கமாம் "திங்களையும்"அத்திங்கள் சிலவற்றின் பெயர்களையும் அறிந்திருந்தனர். "வைகல்"எண்தேர் செய்யும் தச்சன், திங்கள் வலித்த கால் (புறம்: 87), "ஆடித்திங்கள் பேரிருட் பக்கம்" (சிலம்பு : கட்டுரை காதை, 133) "தைஇத் திங்கள்" (நற்றி : 80 குறுந் : 196; புறம் 70) நோன்பியர் தை ஊன் இருக்கை (நற்றி 22, என்ற தொடர்களைக் காண்க ('தண்பொழில் பங்குனி முயக்கம்’ (அகம் : 187)

திங்கள் பலவற்றின் தொகுப்பாம் ஆண்டையும் அறிந்திருந்தனர்; அதை, "யாண்டு"என்றும் அழைத்தனர். "வேந்துறு தொழிலே யாண்டினது அகமே"(தொல்: கற்பு : 48) "யாண்டு பலவாக நரையில ஆகுதல்" (புறம் : 191) "பூ இடைப் படினும் யாண்டு கழிந்தன்ன" (குறுந்: 57) "யாண்டு பல கழிய"(பதிற்றுப்பத்து 55 மதுரைக் காஞ்சி 150) "யாண்டு"எனும் சொல் இடம் , பெற்ற எண்ணற்ற தொடர்களில் ஒருசில இவை: