பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று தமிழ்ச் சங்கங்கள்

383

 பாராட்டியும், தன்னைப் பழித்தும் பாடிய அப் பாடலையும் தாங்கிக்கொள்ளும் தகையோனாய் விளங்கினான்.

மேலே எடுத்து வைத்த அகச்சான்றுகளால், பாண்டியர் தமிழ்ச் சங்கம் நிறுவினர் என்பதோ, அதில், இத் தொகை நூல்கள் அரங்கேற்றம் பெற்றன என்பதோ நம்ப இயலாதன’’ என்ற தம் முடிவிற்குத், திருவாளர் பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள் காட்டிய, தம் பகையரசர்களையும் பாராட்டும் பாடல்களைக் கொண்ட தொகை நூல்களையோ, அத் தொகை நூல் பாடிய புலவர்களையோ, தாம் நிறுவித் தாம் தலைமையேற்று நடத்திய தமிழ்ச் சங்கம் ஏற்றுக் கொள்வதைப் பாண்டியர் பார்த்துக்கொண்டிருந்திருக்க மாட்டார்’' என்ற காரணமும் பொருளற்றுப் போவது காண்க.

மேற்குக் கடற்கரையைச் சார்ந்த முசிறி முதல், கிழக்குக் கடற்கரையைச் சார்ந்த மயிலாப்பூர் வரையிலான தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும், தங்களுக்குள்ளாகவே, ஒருவரோடொருவர் அடிக்கடி போர் செய்து கொண்டிருக்கும் அரசர்களின் அரவணைப்பில் வாழ்பவர்களுமாகிய புலவர்கள், மதுரை அரசன் ஆணையேற்று ஓரிடத்தே கூடியிருந்தனர் என்பதை நம்புவது இயலாது’’ (பக்கம்: 233).

முச்சங்கம் இருந்தன என்பது நம்ப இயலாத ஒன்று என்ற தம் கருத்துக்குத், திருவாளர், பி. டி. எஸ். அவர்கள் காட்டும் காரணங்களுள் நான்காவது காரணம் இது.

வேள்பாரியின் பறம்பு, வையாவிக்கோ பெரும்பேகனின் பொதினி, கண்டீரக்கோ பெரு நள்ளியின் தோட்டி, வல்வில் ஒரியின் கொல்லி, மலையமான் திருமுடிக் காரியின் முள்ளுர், செல்வக்கடுங்கோ வாழியாதனின் நேரி, மலைகளையும், அயிரை ஆற்றையும் அறிந்துள்ளார். அஃதை கூடலுக்கு அவர் சென்றுள்ளார். இருங்கோ வேள், விச்சிக்கோன் இவர்களின் அரசவை சென்று முறையீடுகள் வைத்துள்ளார்.