பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

412

தமிழர் வரலாறு

கல்லதர் அருப்புழை அல்கிக், கானவன்
வில்லில் தந்த வெண்கோட்டு ஏற்றைப்
புனையிரும் கதுப்பின் மனையோள், தொண்டிக்
குடிமுறை பகுக்கும் நெடுமலை நாட !
உரவுச்சின வேழம், உறுபுலி பார்க்கும்
இரவின் அஞ்சாய்; அஞ்சுவல்;அரவின்
ஈரளைப் புற்றம் காரென முற்றி,
இரைதேர் எண்குஇனம் அகழும்
வரைசேர் சிறுநெறி,வாரா தீமே;”

—நற்றிணை : 336

ஆற்றுப்பள்ளத்தாக்கில்:

ஆற்றுப்பள்ளத்தாக்கு நிலத்தில் எழுந்த ஒரு பாடல்:பொய்கையில் மீன் தேர்ந்துண்ட நாரைகள், நெற்கதிர்ப் போரில் சென்று உறங்கும்;நெய்தல் வளருமளவு வளத்தால் அழகு பெற்ற வயலில், நெல் அறுவடை செய்யும் உழவர், முகை அவிழ்ந்து மலர்ந்த இதழ்களையுடைய ஆம்பலின்

அகன்ற இலையாலான தொன்னையில், மதுவுண்டு, தெளிந்த கடலலை எழுப்பும் சீரான ஒலிகளின் தாளத்திற்கு ஏற்ப ஆடி மகிழும், நன்செய் வளமிக்க நாட்டிற்கு உரிய வேந்தே! பழம் உண்ணுவான் விரும்பி, ஆகாயத்தில் உயரப் பறந்து, மலைக் குகைகள் எதிரோவிக்கப் பேரோலி எழுப்பியவாறே சென்று, ஆங்குள்ள பழமரங்கள், பருவம் கழிந்து போகக், காய்ப்பு மாறிவிட்டது கண்டு ஏமாந்து, வருந்தி, வறிதே மீளும் பறவைகளைப் போல, வருவார்க்கு வரையாது வழங்குவன் என்ற உன் புகழ்துரத்த வந்து, உன் புகழ்பாடும் நான், வறிதே மீளக் கடவனோ ?’’

'பொய்கை நாரை, போர்வில் சேக்கும் நெய்தலம் கழனி நெல்லரி தொழுவர், கூம்புவிடு மென்பிணி அவிழ்ந்த ஆம்பல் அகலடை அரியல் மாந்தித்,தெண்கடல்