பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

438

தமிழர் வரலாறு

அம்மாளிகை வாழ்மகளிர், விருந்தினர்க்கு உணவு படைப்பதன் முன்னர், மாளிகையின் முற்றத்தில் பலியாகப் போட்ட கொக்கு உகிர் போலும் சோற்றைத் தின்ற காக்கைக் கூட்டம், பொழுது மறைய, மீன் அங்காடி புகுந்து, ஆங்கு நிழலில் குவித்து வைத்திருக்கும் பச்சை மீன்களைக் கவர்ந்துகொண்டு கடற்கரையில் வினை ஒழிந்து ஆடிக் கொண்டிருக்கும் கப்பலின் பாய்மரத்தில் சென்று தங்கும். இதைப் படம் பிடித்துக் காட்டுகிறார் ஒரு புலவர்.

‘’கதிர்கால் வெம்பக், கல் காய் ஞாயிற்றுத்
திருவுடை வியன் நகர் வருவிருந்து அயர் மார்
பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த
கொக்கு உதிர் நிமிரல் மாந்தி, எற்பட
அகல் அங்காடி அசைநிழல் குவித்த
பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும்‘’.

- நற்றிணை : 258 : 3.9

பழங்காலத்தில், பெரிய தெய்வ வழிபாடுகள், பலிகொடுத்தல், தெய்வத்தன்மை வாய்ந்த ஆடல், பாடல்களை ஒருங்கே கொண்டிருக்கும் அத்தகு ஒரு வழிபாடு கீழ்வருமாறு கூறப்பட்டுளது. ‘’ஒ எனும் பேரொலி எழ, வெள்ளை வெளே ரென ஒளி விளங்க ஒடிவரும் அருவிகளால் விளக்கம் பெற்ற மலைச் சாரலில், வேங்கையின், தேன் கமழும் மலர்களைச் சூடிக் கொண்டு, தொண்டகப் பறை எழுப்பும் ஒலியின் தாளத்திற்கு ஏற்ப, ஆடவரும் பெண்டிரும் தெருக் களில் கலந்து ஆடி மகிழும் சிறு சிறு குடிகளைக் கொண்ட பாக்கத்தில் முருகன் உலாவருதலைக் கூறுகிறது ஒரு செய்யுள்'‘’.

‘’கறங்கு வெள் ளருவி பிறங்குமலைக் கவாஅன்,
தேம் கமழ் இணர வேங்கை சூடித்
தொண்டகப் பறை ச்சீர் பெண்டிரொடு விரைஇ