பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

472

தமிழர் வரலாறு

திபெரியஸ் (Tiberiws) அவர்கள் (கி. பி. 14 - 37), உரோமானியக் குடியரசின் ஆட்சிப் பேரவைக்குப் பொதுநலன் கருதி எழுதவேண்டுவது தேவை எனக் கி. பி. 22இல் உணர்ந்தார், (Tacitws Annals III 53}. செங்கடல் மீதான அராபியர் ஆதிக்கம், பேரரசர் கிளாடியஸ் காலத்தில் (கி. பி. 41 . 34) முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுவிட்டது. அவன் ஆட்சிமுடிவுப் பருவத்தில், நவரத்தினங்களுள், முத்துக்களிலான .நேரிடைக்கடல் வாணிகம் பெரிதும் வளர்ந்துவிட்டது. இந்தியா, தன்னுடைய பண்டங்களைத் தொடக்கநிலை விலையைப் போல, முழுமையாக நூறு மடங்கு விலைக்கு, நம்மிடையே விற்றுவிட்டு, ஆண்டுதோறும், பத்து நூறு ஆயிரம் மதிப்புள்ள பொன்னை, நம் நாட்டிலிருந்து வற்றச் செய்துவிடுகின்றனர் என கி. பி. 70இல், பிளைனி குறைபட்டுக் கொள்வதற்கேற்ப, கிளாடியஸ், நீரோ அவர்கள் காலத்தில், இந்த வாணிகம் மிகப்பெரிய அளவிற்கு வளர்ந்துவிட்டது. (Pliny Natural History VI Page - 26). தமிழ்நாட்டின் அன்றைய முக்கிய இறக்குமதிப் பொருள்களாக இருந்தவை, பொன், வெள்ளி, உரோம நாணயங்கள், (அக்காலத்தில், நாணயம் அடிக்கும் கலையைத், தென்னிந்தியா வளர்த்துக் கொண்டதாகத் தெரியவில்லை). மற்றும் மது ஆகிய இவைகளாகவே இருந்தன. ஆதலின், தன் நாட்டுப் பொன் அழிவு குறித்துப் பிளைனி, குறைபட்டுக் கொள்வதற்கு நல்ல காரணங்கள் இருந்தன; மலபார் கடற்கரை முதல், கிழக்குக் கடற்கரை வரையான, தமிழ் நாட்டின், அகன்று நீண்ட நிலப்பரப்பில், பல்வேறு இடங்களில், ரோம நாணங்கள், மண்ணுள் புதைக்கப் பட்டிருந்தன:

மரவினம் தரு பொருள்களில் வாணிகம் :

தென்னிந்தியாவிலிருந்து உரோமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மரவினம்தரு பண்டங்களில் தலையாயவை, மருந்துப் பொருள்களும், மணப்பொருள்களுமாம். பேரரசு ஆட்சிக் காலத் தொடக்க நிலையில், இந்தியாவோடு நடைபெற்ற