பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி. பி. முதல் ஐந்நூறு ... வாணிகம்

487

பரந்த பசும்பொற்கொடி, பதாகையொடு கொதிக்கும்,
திருந்து மதில் தெவ்வர் தலை பனிப்பத் திருந்தின்றே”,
- சீவக சிந்தாமணி ; 101 - 104


யவனப் போர்ப் பொறியாளர்கள் மட்டுமல்லாமல், யவனக் கைவினைஞர் பலரும் தமிழ் நாட்டில் குடி வாழ்ந்திருந்தனர். யவனத் தச்சரின் உரோமக் கைவினைஞர் வேலைப்பாடு பழந்தமிழ் இலக்கியங்களில் பரவலாகப் பாராட்டப்பட்டுளது. யவனர் இயற்றிய பாவை விளக்கின் நலம் ஓரிடத்தில் பாராட்டப்பட்டுளது.

“யவனர் இயற்றிய வினைமாண் பாவை
கையேந்து ஐயகல்”

மகதவினைஞர், மராட்டக் கம்பர், அவந்திக் கொல்லர், தண்டமிழ் வினைஞர்களோடு கூடிப் பணிபுரியும் யவனத் தச்சரை மணிமேகலை பாராட்டுகிறது.

“மகத வினைஞரும், மராட்டக் கம்மரும்
அவந்திக் கொல்லரும், யவனத் தச்சரும்
தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடி”;
-மணிமேகலை : 19 :107 - 109


கி. பி. 500க்கும் 1000க்கும் இடையில் எழுதப்பட்ட உதயணன் பெருங்கதை என்ற நூல் யவனர்களைப் பல இடங்களில் குறிப்பிடுகிறது. அது, யவனர் இயற்றிய அணிமணி, “யவன மஞ்சிகை”, (காதை : 32 : 76) பாவை விளக்கு, “யவனப் பாவை அணிவிளக்கு (17 : 175) யவனர்களின் கைவேலைப்பாடு சிறக்கப் பண்ணப்பட்டமகர வீணை “யவனக் கை வினை மாணப் புணர்த்தோர் மகர வீணை” (16 : 22 - 23) பெட்டி, “யவனப் பேழை” (22 : 213) பொன்னால் ஆன தாமரைபோலும் வடிவும் வனப்பும் உடைய தான யவன ஆரியர் பண்ணிய வண்டி.” யவனக் கைவினை ஆரியர் புனைந்தது, தமனியத்து இயன்ற தாமரை போல