பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

488

தமிழர் வரலாறு

வையம்” (38 : 233 - 234, 239) யவனச்சேரி ஒன்று குறிப்பிடப்படுவதால், யவனர்கள் பெருந்திரளாக வந்து வாழ்ந்திருக்க வேண்டும். “ஐம்பதினிரட்டி யவனச்சேரி” (4 : 1, 8) “பயனறவு அறியா யவனர் இருக்கையும், கலந்தரு திருவின் புலம் பெயர் மாக்கள் கலந்திருந்து உலையும் இலங்கு நீர் வரைப்பு : (சிலம்பு : 5 , 10 - 12)

தாலமியின் கில நூலும் தென்னிந்தியாவும் :

தாலமி, கி. பி. 150இல் எழுதிய நில நூல் பற்றிய தம்முடைய ஆய்வுக் கட்டுரையில், தமிழ்நாடு பற்றிய விளக்கமான செய்திகளைப் பெரிபுளுஸ் கொடுத்திருப்பதைவிட, அதிகமாக அளித்துள்ளார். தென்னாடு பற்றிய தம்முடைய அறிவினை, அவர், தென்னாடு சென்று வாழ்ந்திருந்தவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். தென்னிந்தியா, வழி வழி சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தரிடையே மட்டுமல்லாமல், வேறு, எண்ணற்ற குறுநிலத் தலைவர்களுக் கிடையேயும், பங்கிடப்பட்டுக்கிடந்தது ; அம் மூவேந்தர்களும், ஏறத்தாழ, ஒத்த நிலையினராகவே இருந்தனர். கரிகாலனைப் போலும் சோழ அரசர்கள், தென்னிந்தியா முழுமைக்கும் தாமே ஒப்பற்ற பேரரசர் எனக் கூறிக் கொள்ளும் நிலமை அதுவரை தொடங்கப்படவில்லை என்பன, அவருடைய மதிப்பீட்டிலிருந்து நம் மனதில் இடம்பெறும் பொதுவான கருத்துக்களாம். தாலமியின் கருத்துப்படி, சோழர்கள், ஓரளவு நாடோடிகளாவர். அவர்களுடைய தலைநகர், ஆர்க்காடாக இருக்குமோ என எண்ணத்தகும் நிலையினராகிய அவர்களுடைய பெயர், “சொரைடே” (Sorietae) “சொரிங் கோய்” (soringoi) “சொரே” (Sorae) என்பதிலும், உரையூரின் மற்றொரு பெயராம் உறந்தை என்பதின் திரிபாம் “ஒரத்தொரா” (Orthora)வைத் தலைநகராக்க கொண்ட, இனப்பெயராம் என மதிக்கத்தக்க “சொர்நாஸ்” (Sornas) என்பதிலும் மறைந்துளது. தாலமி காலத்தில், பாண்டியர்களும், குறிப்பிட்ட ஒரு சிறு எல்லைக்குள்ளாகவே இருந்தனர். (Warmington page: 1 14 - 115): இது ஒன்றே, மூன்று