பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

508

தமிழர் வரலாறு

முன்பு நிலவியிருந்தது என்ற கருத்திற்குக் கொண்டு செல்கிறது. இந்தத் தற்காலிகப் புனைவுக் கற்பனை, மகா வம்ஸத்தில் (அதிகாரம் : 29) காணப்படும் வட்டகாமணி, (வழிவழியான மரபுவழிக் கணக்கீட்டின் படி) கி. மு. 157இல் அனுராத புரத்தில் ஒரு கம்பத்தை நாட்டினான் ; அது குறித்து எடுத்த புனித விழாவின்போது, பேரறிஞர் மகாதேவர், “பல்லவ பொக்கப்” புத்தப் பள்ளியிலிருந்து நானூற்று அறுபது ஆயிரம் பிக்குகளோடு வருகை தந்தார்” என்ற அறிவிப்பால் உறுதி செய்யப்படுகிறது. திருவாளர் பவுல் கெஸ் அவர்கள் பல்லவ பொக்காவைக், காஞ்சீபுர மாவட்டமாக அடையாளம் கண்டு, ஆகவே பல்லவப் பேராசு, கி. மு. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றியிருக்க வேண்டும் என முடிவு செய்கிறார். (J. R. A. S. 1885 art IX and 1889 art XIII.)

காஞ்சி மாநகரில், புத்தப் பள்ளிகளே மட்டுமல்லாமல் பிராமனாக்கள் ஒருசிலவும் இருந்திருக்க வேண்டும்: இந்நகரைச் சேர்ந்த மிகச் சிறந்த பிராமணப் பேரறிஞர்கள், வடவர்களுக்குத் தெரிந்திருந்தனர் என்பது முன்னே குறிப்பிடப்பட்டுளது. பாணாவாசியில், கடம்ப அரச இனத்தைப் பிற்காலத்தே தோற்றுவித்த மயூரசர்மன் கல்வி கற்ற, வேதங்கள் மற்றும் சமஸ்கிருத அறிவு நூல்களைக் கற்றுத் தருவதற்கான கல்லூரி ஒன்று, கி.பி.நான்காம் நூற்றாண்டளவில் காஞ்சியில் நிலைபெற்றிருந்தது. இம் மயூரசர்மனின் கொள்ளுப் பெயரன், அதாவது பெயரனின் பிள்ளையாம் காகுஸ்தவர்மனின் தள குண்டா எழுத்துப் பொறிப்பு, மயூரசர்மன், தன் ஆசிரியன் வீரசர்மனோடு, பல்லவ அரசர்களின் நகருக்குச் சென்று சமய அறிவுகளை யெல்லாம் அறிந்து கொள்ளும் ஆர்வ மிகுதியால், ஆங்குள்ள கல்லூரியாம் கடிகத்துள் மாணவனாக இடம் கொண்டு விட்டான் எனக் கூறுகிறது. ("யஹ் ப்ரயாய பல்லவவெந்த்ர புரீம் குருனா சமம் வீர சர்மனா, அத்ஹீஜிக்ஹாம்சுஹ் ப்ரவகனம் நிக்ஹிலம் விவேஸாயய தர்க்குகஹ் Ep. and p. 32 *V, 10) இக்கடிகம், காஞ்சி, முதற்பல்லவ அரச இனம்