பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

522

தமிழர் வரலாறு

எனக் கூறுவதன் மூலம், வேழங்கள் மலிந்த வேங்கடமலைக்கு உரியான் திரையன் எனக், காட்டூர்கிழார் கூறியதைத் தாமும் உறுதி செய்துள்ளார். "செந்தீப் பேணிய முனிவர், வெண் கோட்டுக் களிறுதகு விறகின் வேட்கும் ஒளிறு இலங்கு அருவிய, மலைகிழவோனே" (பெரும்பாண் , 498-500) இவ்வகையால், தொண்டையர்க்கு உரிய வேங்கடம் திரையனுக்கும் உரியது. எனக் கூறியதன் மூலம், தொண்டையர்க்கும், திரையனுக்கும் உள்ள உறவினை மறைமுகமாக உணர்த்திய பெரும்பாணாற்றுப் படை ஆசிரியர், அப்பாட்டுடைத் தலைவன் பெயர் திரையன் என்பதைப் "பல்வேல் திரையன் படர் குவிராயின்" (37) எனக் கூறியதன் மூலமும் அவன் தொண்டையர் மரபில் வந்தவன் என்பதைப், பகைவர் மண் தரும் வளம் உண்ணும் உரவோர் தொண்டையர் எனத் , தொண்டையோர்க்குக், கல்லாடனார் ஏற்றிக் கூறிய சிறப்பைத் தாமும், அத் தொண்டையோர்க்கு ஏற்றி, அம்மரபில் வந்தவன் என்பதைக் "கொண்டி உண்டித் தொண்டையோர் மருக" எனக் கூறியதன் மூலமும் (454) வெளிப்படக் கூறி உறுதி செய்வதும் செய்துள்ளார். இத் திரையனையும், அவனது அழியாப் பெரும்புகழையும் அறிந்து பாராட்டியுள்ளார் நக்கீரர் "செல்லா நல்லிசைப் பொலம்பூண் திரையன்" (அகம் : 340) இத் திரையன், கடல் திரை, கொண்டு வந்து கொடுத்த மரபில் வந்தவன் என, அவன் குலவழி மரபையும், "திரைதரு மரபின் உரவோன் உம்பல்" (31) அவன் அரசாள் நாட்டின் தலைநகர் கச்சி ஆகும் "கச்சி யோனே கைவண் தோன்றல்" f426) என அவன் தலைநகரையும் தெளிவாக்கியுள்ளார் பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர்.

வேங்கடம் தொண்டையர்க்கு உரியது எனக் கூறிய புலவர் தாயங்கண்ணனார், அது கூறிய அதே பாட்டில் (அகம் 213) வேங்கடத்துக்கு அப்பால் உள்ள வடுக நாட்டையும், "வேங்கடத்து உம்பர்.வடுகர் தேஎயம்" 13.8) போர்வல்ல சேரர்க்கு உரிய கொல்லிமலை சார்ந்த மேற்கு மலையையும், "வெல்போர் வானவன் கொல்லிக் குடவரை". (15), இரவலர்க்குப் பொன் அணிகளை வாரி