பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

தமிழர் வரலாறு

கிற்ஷனின் ஹ்' (ரிக்வேதம் : 18:23) அழகுசெய்யப்பட்டன. கங்கைச்சமவெளியிலிருந்து, சிறிய அளவில் கொண்டுவரப் பட்ட தரம் குறைந்த முத்துக்கள். தேவையை மிக அருகியே நிறைவேற்ற,அதனால், முத்துக்கள் தென்னிந்தியாவிலிருந்து, வடக்கிற்குத் துாக்கிச்செல்ல வேண்டுமளவு, முத்தை யும், அதன் தாய் முத்தையும் பயன்படுத்துவது மிகப் பெரிய அளவினதாக இருந்தது. தாய் முத்தினாலான தாயத்தை அணிந்துகொள்ளும்போது ஒதப்படுவதான, அதர்வவேதத்தின், 'சங்கு மணி ஆக்கம் என்ற ஒரு முழு ஆக்கம், முத்துக்களைப், பின்வருமாறு புகழ்கிறது, 'இப் பொன்முத்துச் சிப்பி, காற்று மண்டலத்திலிருந்து மின்னலின் ஒளியிலிருந்து, பிறந்து, எங்களைக் காப்பாற்று மாக' ('வாதாஜ்ஜா தொ அந்தரிக்ஸாத் வித்யு தொ ஜ்யொதிஸ்ஸ்பரி ஸ் நொ ஹிரண்யயா கங்ஹஹ் கிர்ஷனஹ். பாத்வம்ஹஸ்ஹ்” (அதர்வ வேதம் : 10:1) நீ, தேர் மீது தெளிவாக, முனைப்பாகக் கிடக்கின்றாய் அம்பறாத்துணி மீது புத்தொளி காட்டித் திகழ்கின்றாய்' (ரதெ த்வமஸி’ தர்ஷத இஸ்”த்ஹவு ரொகனஸ் த்வம்’ (அதர்வ வேதம் : 6:10, 6) மின்னலோடு கூடிய பர் ஜன்யத்திற்கு எதிராகக் கடல் முழங்கும்போது, அக்கடலிலிருந்து பிறக்கிறது, இப் பொன் துளி (யத் சமுத்ரொ, அப் ஹயக்ரன்தத் பர்ஜன்யொ வித்யதா சஹ்ததொ ஹிரண்யயொ பிந்துஸ்ததெ. ஆர்ப்ஹொ அஜாவத’’ (அதர்வ வேதம் IX 30:5) சத்விம்ஸ் பிராமண ; (V : 6) முதலில் கூறிய சங்குமணி ஆக்கத்தைப் போலவே எடுத் துக் காட்டிய கடைசி மந்திரமும், கடலில் விழும் மழைத் துளிகளின் உருமாற்றத்தினாலலேயே முத்துக்கள் பிறக்கின்றன என்ற நம்பிக்கையைக் குறிப்பாகச் சுட்டுகிறது எனத் திருவாளர் வெயிட் நெய் (Whit Ney) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். எல்லைகாண மாட்டாக் காலத்திலிருந்தே, கடலடியில் கிடக்கும் முத்துச் சிப்பிகளை மூழ்கிக்கொண்டு வரும், தென்கோடித் தமிழகத்தில் கட்டிவிடப்பட்ட பாமர மக்களின், உயிரியல் சார்ந்த கருத்து அது. ஆடவர் பெண்டிர் களை மட்டுமல்லாமல், அவர்களுடைய தேர்கள், குதிரைகள், அம்பறாத்தூணிகள், மற்றும் பிற பொருட்களையும்.