பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

தமிழர் வரலாறு

உண்மையாக இருக்கவும் கூடும். ஆனால், தஸ்யூக்களை, நாகரீக மக்களாக மாற்றுவதற்காகவே மணந்தனர் என்பது, அறவே தேவையற்ற ஒரு கூற்று ஆகும். தஸ்யூக்கள் நாகரீக மற்ற பழங்குடியினர் அல்லர். வரலாற்று ஆசிரியர்கள் பலரும், புதிய கற்காலத்தைச் சேர்ந்த, கலை நுணுக்கம் வாய்ந்த கைவினைப் பொருட்களிலும், பண்டைய தமிழ்ச் சொற்களிலும், எண்ணற்ற சான்றுகள் காணக்கூடிய, பிற் காலத் தமிழிலக்கியங்களில் எதிரொலிக்கக் கூடிய 88 ஆரிய காலத்திற்கு முந்திய காலங்களில், இந்தியர்கள் அடைந்திருந்த மிகச் சிறந்த நாகரீகத்தை உணராமையாலும், தஸ்யூக்களில் நாகரீகம் பற்றிய வேதக்குறிப்புகளை மதியாமையாலும், நாகரீகமற்ற தஸ்யூக்கள் பற்றிய புராணக் கதைகளைக் கட்டி விட்டனர். ஆரியவர்த்தத்தின் மரபு வழிப் புனிதத் தன்மையும், பழம் புராணக் கதைகளில் நிறையக் கிடைக்கும், இராக்கதர்களின் கொடுமைகளை மிகைப்படுத்திக் கூறும் கதைகளும், இத்தவறான கூற்றை உறுதி செய்யத் துணைபுரிந்தன. தஸ்யூக்கள் பற்றி இருடிகள் பேசும்போது, அவர்கள், அவர்களின் பகைவர் குறித்தும் பேசுகின்றனர், என்பதை நினைவில் கொண்டு உண்மையைக் கடும் வெறுப்புக் காரணமாக மிகைப்படுத்திக்கூறும் கூற்றிலிருந்து, கழித்தே பார்க்க வேண்டும். வேத மந்திரங் களிலும், வீரகாவியங்களிலும், புராணக் கட்டுக்கதைகளிலும், தஸ்யூக்கள், ராஷதர்களின் காட்டுமிராண்டித் தனம் பற்றிய பழிப்புரைகளுக்கு இடையிடையே, அவர்களுடைய உயர்ந்த நாகரிகம், கோட்டை நிகர் மாளிகைகள், பொன் அணிகள், செல்வ வளங்கள், மற்றும் பிற நலங்கள் பற்றிய, ஏராளமான பகுதிகளும் உள்ளன என்பதையும் நாம் மறத்தல். ஆக அத்தஸ்யூக்கள் நாடு கடத்தப்பட்ட ஆரியர்களாலும், அவ்வப்போது வந்துசேரும் ஒரு சில ஆரிய வந்தேறிகளாலும், நாகரீகம் பெறக் காத்திருந்த நாகரிகம் கல்லாப் பழங் குடியினர் அல்லர்:

தக்கண நாடு, வடநாட்டிலிருந்து கட்டுறுதியாகப் .பிரிவுண்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தது; பழங்கால ஆரிய