பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

தமிழர் வரலாறு


கோல் நிறைதுலாஅம் புக்கோன் மருக!
ஈதல், நின் புகழும் அன்றே; சார்தல்
ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல்
துாங்கெயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின்,
அடுதல், நின் புகழும் அன்றே; கெடுவின்று
மறங்கெழு சோழர் உறந்ததை அவையத்து
அறம் நின்று நிலையிற்று ஆகலின், அதனால்,
முறைமை நின் புகழும் அன்றே; மறம்மிக்கு
எழுசமம் கடந்த எழுவு ஊறழ் திணி தோன்
கண்ணார் கண்ணிக், கலிமான் வளவ!
யாங்கனம் மொழிகோ! யானே, ஓங்கிய
வரை அளந்தறியாப் பொன்படு நெடுங்கோட்டு
இமயம் சூட்டிய எம விற்பொறி,
மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய
வாடா வஞ்சி வாட்டும் நின்

பீடுகெழு தோன்தாள் பாடுங்காலே?"
-புறம் : 39

அடிக்குறிப்பு :

("வஞ்சி" என்ற சொல், நகர் ஒன்றின் பெயராகவும், மலர் ஒன்றின் பெயராகவும் வழங்கப்படும் ஆதலின், மலர்வாட, நகர் வாடாது. ஆதலின், நகரைக் குறிக்க "வாடாவஞ்சி" எனக் குறிப்பிடப்பட்டுளது. இத்தகு சிலேடைச் சொல்லாட்சி, பழந்தமிழ்ப் பாக்களில் பலவாம்)

கரிகாலன் இளையோனாக இருந்தும், தீர்த்தற்கரிய ஒரு வழக்கை, நன்கு தீர்த்துவைத்த அந்நாள் தொட்டே. உறையூர், அறங்கூர் அவையால், நாடறியப் புகழ்பெற்றுத் திகழ்ந்தது. (அதிகாரம் 20: "கரிகாலன் இளமை" என்ற தலைப்பு காண்க) அதுபோலவே மதுரை, தமிழ்க் கல்வியால் சிறப்புற்றுத் திகழ்ந்தது, புறம் : 58, அறம் நின்று நிலைபெறும்