பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

தமிழர் வரலாறு


துணைவேண்டாச் செருவென்றிப்,
புலவுவாள், புலர் சாந்தின்,
முருகன் சீற்றத்து உருகெழு குருசில்!
மயங்கு வள்ளை, மலர் ஆம்பல்,
பனிப்பகன்றைக், கணிப்பாகல்,
கரும்பல்லது காடறியாப்,
பெருந்தண் பனை பாழாக,
ஏம நன்னாடு ஒள்ளெரி ஊட்டினை,
நாம நல்லமர் செய்ய,

ஓராங்கு மலைந்தன, பெரும! நின் களிறே".
-புறம் : 16

பின்னர் அவன் ராஜசுய யாகம் செய்து, முடிசூட்டு விழாவை ஆரிய முறையில் மேற்கொள்வதும் செய்தான். அதனால், அவன், ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என அழைக்கப்பட்டான், தஞ்சாவூரைச் சார்ந்த, பிற்காலச் சோழர்களால், கரிகாலனோடு ஒருங்குவைத்து, மிகப் பழைய குலமுதல்வனாக நினைவு கூரவும் பட்டான். [Vide the Leydan Grant and Thriuvalangadu Inscription ; also S. J. I. Vol. II Part III. These later Inscriptions however confuse, the order of sequence of these two early Solas.] ராஜசூயம் வேட்ட ஒரேயொரு பழைய சோழன், பெருநற்கிள்ளி ஆவன்; ஆகவேதான் அப்பெருஞ்செயலைச், சிறப்புடைய தன் அடையாளமாகக் கொண்டான். இப்பெருஞ்செயல், தமிழ்நாட்டு மக்களின் கலாச்சாரத்தில் ஆரியக் கலப்பு பெருமளவில் வளர்ந்துவிட்டது என்பதையும் உணர்த்துகிறது. இது அவன் புகழ்பாடும் பாக்கள் ஒன்றில், பொருள் வேண்டி வந்து நிற்கும் பார்ப்பனரின் ஈரம்பட்டகையில், பூவையும், பொன்னையும், புனலொடு சொறிந்த அவன் செயல் பாராட்டப் பெற்றிருப்பதாலும் உறுதி செய்யப்படுகிறது.

"ஏற்ற பார்ப்பார்க்கு ஈரங்கை நிறையப்

பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து"
-புறம் : 367 : 4-5