பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

தமிழர் வரலாறு


உண்ணும் நாரைக்கூட்டம், வயல்களின் அயலிடத்தவான நெற்போர்களில் உறங்கும், நெல் வளம் மிக்க, பொன்னால் ஆன முகபடாம் அணிந்த யானைகளைக் கொண்ட பழம் பெரும் குடியினராம் வேளிர்க்கு உரிய முத்துாற்றுக் கூற்றத்தையும் கைக்கொண்டே வெற்றிக்கு உரிய, வெண்கொற்றக் குடையினையும், வெற்றிக்கொடியால் அழகு பெறும் தேரினையும் உடைய செழிய !"

"ஓம்பா ஈகை மாவேள் எவ்வி
புனலம் புதவின் மிழலையொடு, கழனிக்
கயல்ஆர் நாரை போர்வில் சேக்கும்
பொன்அணி யானைத் தொன்முதிர் வேளிர்
குப்பை நெல்லின் முத்துாறு தந்த,

கொற்ற நீண்குடைக், கொடித்தேர்ச் செழிய !"
-புறம் 24 : 18 - 23:

பிற பாக்களால் கொடுக்கப்படும் செய்தியை, மதுரைக் காஞ்சி உறுதிசெய்கிறது. அவை கொடுக்கும் செய்திகளோ, மேலும் சில செய்திகளை இணைக்கிறது. நெடுஞ்செழியனின் மேற்கூறிய வெற்றிகளோடு, அவன் நெல்லால் பெயர் பெற்ற நெல்லின் ஊர் எனும் ஊரைக் கைக் கொண்டதையும். [சீர் சான்ற உயிர் நெல்லின் ஊர் கொண்ட உயர் கொற்றவ" - மதுரைக்காஞ்சி : 87 - 88.] சேரப் பேரரசுக்கு அடங்கிய குட்டநாட்டு மக்களை வெற்றி] இது, உறுதியாக, தமிழ்நாட்டு எல்லைக் கண் உள்ள பேரூரும், பழங்காலத்தில் தமிழ்நாட்டின் துறை முகமும் ஆன நெல்லுரே ஆகும். நச்சினார்க்கினியர், இந்நகரை, மதுரைக்கு வடக்கில் நெடுந்தொலைவில் இல்லாத, சோழநாட்டுக் கடற்கரை ஊராம் சாலியூராகக் கொள்வதையே விரும்புகிறார். நெடுஞ்செழியன், இதைத் தன் கப்பற் படைத்துணையால் கைப்பற்றினான்.] கொண்டதையும் ["பல்குட்டுவர் வெல்கோவே"- : 105] செல்வ வளம் கொழிக்கும் முது வெள்ளிலை என்ற நகரையும் அழும்பில் என்ற நாட்டினையும் கைப்பற்றியதையும்,