பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாண்டிய அரசர்கள்

187


ஆங்கிருந்து மீட்டு. நமக்கு அணித்தாக உள்ளனமீது போக்கின், நம்மைச் சூழ இருக்கும் மக்கள் கூட்டம், பண்ணியம், பன்னிறமலர்கள், மணமாலைகள், மணம் தரு பொருள்கள். வெற்றிலை, பாக்கு, மற்றும் இன்ன பிற பொருட்களை ஏந்திவிற்கும் சிறுவணிகர்களை மையமாக் கொண்டு, சின்னம் சிறு வட்டங்களாகத் தனித்தனியே சுழன்று சுழன்று வருவது காணலாம். மதுரை, ஒருபடைத்தள நகரமும் ஆம் ஆதலின். மாநகர் வீதிகளின் போக்குவரத்து, அவ்வப்போது, அரசனின் நாற்படை. நடமாட்டத்தால் நிலை குலைந்து போவதும் உண்டு. கொடிய சுழற்காற்றால் மேலுண்டு நங்கூரக் கல்லோடு பிணிக்கப்பட்ட வலியகயிறு அறுபட்டுப் போகக் கடலின் நெடுஞ்சுழியில் அகப்பட்டு அலையும் கலங்கள் போலப், போர்க்களிறுகள், கட்டுத்தறிகளோடு பிணிக்கப்பட்ட கயிறுகளை அறுத்துக்கொண்டு, கூடத்தினின்றும் வெளிப்பட்டு, வீதிகளில் புகுந்து விடும். தேர்கள், காற்றென விரையும் : படைப் பயிற்சி குறித்துக் குதிரைகள் விரைந்து நடைபோட்டுச் செல்லும். இவை அனைத்திலும் கேடாகக் கள்ளுண்டு அளிக்கும் படைவீரர் கூட்டம். இடையூறு விளைக்கும் இவை, வீதிகளின் ஊடே செல்லுங்கால், மக்கள் கூட்டம், உயிருக்கே ஊறுநேர்ந்து விட்டாற்போல் அஞ்சி விதப்புற்று, இங்கும் அங்கும் ஓடிச் சிதறுண்டு போவர். இவ்வமளி அடங்கி, அமைதி நிலவ சிறிது நாழிகை ஆகும். அதன் பின்னர், பண்டங்களைத் தலையில் சுமந்து விற்பாரும், சின்னம் சிறு வணிகர்களும், வீதியின் இருமருங்கிலும் உள்ள பலவடுக்கு மாளிகைகளின் நிழல்களில், தம் வாணிகத்தை மீண்டும் தொடங்கிவிடுவர்: தங்கள் மகளிரினத்துப் பலவீனத்தைத் தெரிந்து வைத்திருக்கும் முதிய பெண்டிர் சிலர், மனைகளின் அகத்தே வாழ்வார், வெளிப்போந்து, தவறாது வாங்கிச்செல்லத் தூண்டும் வகையில், தாம் விற்கும் இனிய பணியாரங்கள், மணம் நாறும் மலர்கள் ஆகியவற்றின் நலங்களை நாவாரக் கூறியவாறே, வீடு வீடாகச் செல்வது, களிப்பூட்டும் கண்கொள்ளாக் காட்சி ஆகும். கார்மேகம் குடித்து விடுவதால் குறைவதோ,