பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

தமிழர் வரலாறு


உயிர் பிரிந்த உடலைத் தீயிட்டு எரிக்கும் வழக்கம் சில இடங்களில் மேற்கொள்ளப் பட்டாலும், இயல்பான ஈமக் ச ட ங் கு க ள், உரையாசிரியர்களால், வேறுவகையாகக் காட்டப்பட்டாலும், பழந்தமிழ் வழக்கத்தைச் சேர்ந்தனவே என்பது இதிவிருந்து தெளிவாகிறது.

ஒரு வியத்தகு வழக்கம் :

புகழ்பெற்ற பெண்பாற் புலவர் ஒளவையார் அதியமான் நெடுமான் அஞ்சி குறித்துப் பாடிய பாட்டில், ஒரு வியத்தகு வழக்கம் விளக்கப் பட்டுளது. "போரில் தோற்றுப் போவதில் பழகிவிட்ட பெருமையிலா அரசர்களின் போர்க்களத்தில் வாள்பட்டு அல்லாமல், வெறும் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்து போன உடலை, அவர் மீது கொண்ட அன்பையும் மறந்து, வாள்வடுப்படாப் பெரும்பழியை அவரை விடுத்து நீக்கு வான் வேண்டி, அறமே விரும்பும் கொள்கையுடைய, நான்கு வேதங்களிலும் வல்ல அந்தணர் கூறிய நல்வழியில் நின்று, தருப்பைப் புல்லைப் பரப்பி, அதன் மீது அவர் உடலைக் கிடத்தித் தம் பேராண்மையே பற்றுக் கோடாகக் கொண்டு பெரும் போரில் வீழ்ந்த, வீரக்கழல் அணிந்த விழுமிய வேந்தர்கள் செல்லும் வானுலகிற்கு. இவர்களும், செல்வாராக என்று கூறிய வாறே, அவர் உடலை வாளால் வெட்டிப் புதைக்கும்" வழக்கம் கூறப்படுவது காண்க.

"ஓடல் மரீஇய பீடுஇல் மன்னர்
நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்,
காதல் மறந்து, அவர்தீது மருங்கு அறுமார்,
அறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி,
மறம் கந்தாக நல்அமர் வீழ்ந்த
நீள்கழல் மறவர் செவ்வுழிச் செல்கு என,

வாள் போழ்ந்து அடக்கல்."
-புறம் : 95 : 4-11.