பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

தமிழர் வரலாறு


தொகை நூல்களில், புறநானுாறு ஒன்றுதான், பழைய உரையோடு, முதன் முதலாக 1894ல் அச்சடிக்கப்பட்டது. அது ஏனைய மூன்று தொகை நூல்களும் போலும் பழைய உரை ஒன்றைப் பெற்றிருக்கவில்லை பெருந்தேவாரால் பாடப்பெற்ற, அதன் பாயிரப் பாடல், காலத்தால் மிகவும் பிற்பட்ட பாடல் ஆதலின், சிவனை முழுக்க முழுக்க, சமஸ்கிருதப்பாடல் பாணியில் வருணித்துள்ளது. அத்தொகை நூலின் முதற்பாடலாகிய அடுத்த பாடல், முழுவதும் ஆரியக் கருத்துக்களையே கொண்டுளது; அதை அடுத்து வரும் பல பாடல்கள், பிற்காலப் பாடல்களாம். பெரும்பாலான மக்கள், இவற்றைப் படிப்பதோடு நிறுத்திக் கொள்கின்றனர் : ஏனைய மூன்று தொகை நூல்களையும், தொல்காப்பியப் பொருளதிகாரத்தையும் படிப்பதில்லை : அதனால், சமஸ்கிருதப் பாடல்கள் தெனனிந்தியாவை அடைந்த பிறகே, தமிழ்ப் பாக்கள் எழலாயின என்ற தவறான முடிவுக்கு வந்து விடுகின்றனர். மற்றும் சிலர், மேலும் ஒரு படி சென்று, தமிழ்ப்பா, சமஸ்கிருதப் பாவின் மகளாம் என நம்பவும் செய்கின்றனர்.