பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர அரசர்கள்

283


முதற்கண், அவர் கூறும் இரண்டாவது காரணத்தினை ஆராய்வோம். மாமூலனார். 1) அதியமான் நெடுமான் அஞ்சி; 2) அதியன்; 3) ஆவி; 4) எருமையூரன்: 5) எவ்வி; 6) எழிநி: 7) கட்டி: 8) திதியன், 9) நன்னன்; 10) பாணன்; 11) புல்லி. 12) மத்தி, 3) மோகூர்ப் பழையன் முதலாம் குறுநிலத் தலைவர்களைப் பாடியுள்ளார் என்பது உண்மை.

ஆனால், அவர்கள் அனைவரும், திருவாளர் அய்யங்கார் கூற்றுப்படி, மூவேந்தர் ஆட்சியின் மறைவுக்குப் பின்னர் அரசோச்சத் தொடங்கிய வரல்லர். மாறாக, அம் மூவேந்தர் ஆட்சிநிலவிய காலத்திலேயே, அம்மூவேந்தர் ஆட்சிக்கு அடங்கிய சிற்றரசர்களாகவும், அவர்களுக்கு அடங்காது தனியரசு நடாத்தும் சிற்றரசர்களாகவும் இருந்தவர்களே. அவர்களில் ஒருசிலர், அம்மூவேந்தர்களுக்குப் படைத்துணை புரிந்துள்ளனர். ஒருசிலர், அம் மூவேந்தர்களின் பகைவர்களாகி, அவர்களோடு, போரிட்டும் வந்துள்ளனர். மாமூலனாரால் பாடப்பெற்ற இவர்களில் ஒரிருவர் தவிர்த்து, எஞ்சிய ஏனையோரெல்லாம், அம்மூவேந்தர் புகழ்பாடும், பரணர், நக்கீரர், ஒளவையார் போலும் முதுபெரும் புலவர்களால், அம்மூவேந்தர்களோடு இணைத்தே பாடப் பட்டுள்ளனர்.

1) அதியமான் நெடுமான் அஞ்சி : தன்னைப்பாடிய அரிசில்கிழார்க்குத் தன் அரசு கட்டிலையும், பாட வந்து முதுமைத் தளர்ச்சியால் உறங்கிவிட்ட மோசிகீரனார்க்கு முரசு கட்டிலும் அளித்த பெருவேந்தனாம் பெருஞ்சேரல் இரும்பொறை பெரும்படை கொண்டு பல நாள் போரிட்ட பின்னரே கைக்கொள்ள முடித்தது என்ற பெரும்பாராட்டினைத் தரவல்ல, அழிக்கலாகாத் திண்மை வாய்ந்த தகடூர்க் கோட்டைக்கு உரியவனும், சோழனும், பாண்டியனும் துணை வரத் தக்க பேரரசு செலுத்தியவனும், (பதிற்றுப்பத்து : 75), உண்டார் உயிரை நெடிது வாழவைக்கும் அரிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாது ஒளவைக்கு ஈந்து அரும்புகழ் கொண்ட