பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284

தமிழர் வரலாறு


வனும், (புறம் : 91), பாணனும் பாராட்டிய பெரியோன் என ஒளவையாரால் பாராட்டப்பெற்றவனும் (புறம் ; 99) ஆவன் அதியமான் நெடுமான் அஞ்சி; இவனை அகம், 372 ல் பரணர் பாராட்டியுள்ளார்,

2) அதியன் : தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட, நெடுநல்வாடை பாடிய நக்கீரரால், கொங்கரை வென்று நாடுபல கொண்டவனாகப் பாராட்டப் பெற்றவன் பசும்பூண் பாண்டியன், ["கொங்கர் ஒட்டி நாடுபல தந்த பசும்பூண் பாண்டியன்" (அகம் : 2; 3) அப்பசும்பூண் பாண்டியன் படைத்தலைவனாகவும், வாகைப் பறந்தலைப்போரில், பட்டத்து யானையோடு இறந்துபட்டான் எனவும், அதனால் பசும்பூண் பாண்டியனின் பகைவராம் கொங்கர் மகிழ்ச்சிப் பெருக்கால் ஆரவாரித்தனர் எ ன வு ம் பாராட்டிப் பாடியுள்ளார் பரணர்: ["வாகைப் பரந்தலைப், பசும்பூண் பாண்டியன் வினைவல் அதிகன், களிறொடு பட்ட ஒன்றை ஒளிறுவாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே" (குறுந் : 383)] ஆக பெருவீரர் புகழ்பாடும் கிணைப்பறை ஒலி அவிந்துபோக மறைந்த மேலோன் அதியன் ["அதியன் பின்றை வள்ளுயிர் மாக்கிணை கண் அவிந்தாங்கு" (அகம் : 325) என மாமூலனாரால் பாராட்டப்பெற்ற அதியன், நக்கீரரின் பாட்டுடைத் தலைவனாம் நெடுஞ்செழியனின் பகைவர்களாம் கொங்கர்க்கு மகிழ்ச்சியூட்டுதற்குக் காரணமாய், வாகைப் போர்க்களத்தில், போர்க்களிற்றின் மீதிருந்தே உயிர்நீத்த பெருவீரனாவன் எனப் பரணரால் பாராட்டப்பெற்ற பெரியோனாவன்.

3. ஆவி, "நெடுவேள் ஆவி, அறுகோட்டு யானைப் பொதினி"; "நெடுவேள் ஆவி, பொன்னுடை நெடுநகர்ப் பொதினி" (அகம் : : 61) என மாமூலனாரால் பாடப்பெற்ற நெடிவேள் ஆவி, சிறுபாணாற்றுப்படை ஆசிரியர், இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனாரால், "கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய அருந்திறல் அணங்கின் ஆவியர்