பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர அரசர்கள்

285

பெருமகன் பெருங்கல் நாடன் பேகன்” (85-87) எனப் பாராட்டப் பெற்றவனும், கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர் கிழார் போலும் பழம்பெரும் புலவர்களால் பாராட்டப் பெற்றவனும் ஆகிய வையாவிக் கோப்பெரும் பேகனே ஆவன். ஆகவே, அவனும், அவனைப் பாடிய மாமூலனாரும், பரணரின் பாராட்டினைப் பெற்ற இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (அகம் : 396) சேரன் செங்குட்டுவன் (பதிற்றுப்பத்து : ஐந்தாம் பத்து) சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி (புறம் : 4) கபிலர் பாராட்டிய, செல்வக் கடுங்கோவாழியாதன், (புறம் : 8 : பதிற்றுப்பத்து: ஏழாம் பத்து), வேள்பாரி (புறம் : 1.05...) போலும் பேரரசர்கள் வாழ்ந்த காலத்தவரே அல்லது, அவர்களுக்குப் பிற்பட்ட காலத்தவரல்லர். .

4. எருமை ஊரன் : “நுண்பூண் எருமை” (அகம்:115) என மாமூலனாரால் பாராட்டப்பெற்ற எருமையூரன், தலையாலங்கானப் போர்க்களத்தில், பாண்டியன் நெடுஞ்செழியனை வந்து எதிர்த்த, அவன் பகைவர் எழுவரில் ஒருவனாவன். “செழியன்”, ஆலங்கானத்து அகன்றலை சிவப்பச் சேரல், செம்பியன், சினங்கெழுத்திதியன் போர்வல் யானைப் பொலம்பூண் எழனி, நாரரி நறவின் எருமை ஊரன், தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் இருங்கோவேண்மாள், இயல்தேர்ப் பொருநன், என்று எழுவர் நல்வலம் அடங்க” (அகம்:36) என்றும், ஒப்புக்கூறமாட்டா வலிமிகு தோள் உடையவன்; வடுகர்களின் தலைவன்; பெரும்புகழ் வாய்ந்தவன், “நேராவன்தோள், வடுகர் பெருமகன்; பேரிசை எருமை” (அகம் : 258) என நக்கீரரால் பாராட்டப் பெற்றவன் ஆதலின், மாமூலனாரின் பாராட்டினைப் பெரும் அவ்வெருமையூரனும், மூவேந்தர் காலத்தவனே ஆவன்.

5. எவ்வி : திதியனொடு பகைகொள்வது அழிவுக்கே வழி கோலும் என்பதறிந்த எவ்வி, அது செய்ய முனைந்த, தன் நண்பன் அன்னிக்கு அறிவுரை கூறினானாகவும், அவன் அது கேளாதே சென்று, திதியன் காவல் மரமாம் புன்னையை அழித்து, அதனால் சினங்கொண்ட திதியனால் அழிவுற்ற