பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர அரசர்கள்

289

 பொறையின் படைத்தலைவர்களுள் ஒருவனாக இடம் பெற்று வாழ்ந்திருந்த காலை, கழுமலம் எனும் இடத்தில் வந்து எதிர்த்த சோழன் செங்கணான் படைத்தலைவன் பழையனால் அழிவுற்ற, நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், புன்றுறை என்ற அச்சேரர் படைத்தலைவர்களோடு கொல்லப் பட்டான் எனக் குடவாயில் கீரத்தனாரும் , ["நன்னன் ஏற்றை, நறும்பூண் அத்தி, துன்னரும் கடுந்திரல் கங்கன், கட்டி, பொன்னணி வல்வில் புன்றுறை என்றாங்கு, அன்றவர் குழீஇய அளப்பரும் கட்டுர்ப் பருந்துபடப் பண்ணிப் பழையன் பட்டென"... (அகம் : 44)] பாடியிருப்பதால், அக்கட்டியைப் பாடிய மாமூலனார், பரணர் போலும் பெரும் புலவர்களால் பாராட்டப் பெற்ற மூவேந்தர் காலத்து முதியவரே அல்லது, கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் அல்லர்.

8. திதியன் : பரணர் முதலாம் இரவலர்கள், பரிசில் பொருட்களாக எண்ணிலாப் பொன் அணிகளையே பெற்றுக் கொண்ட மகிழ்ச்சியால் புகழ்ந்து பாட, நாள்தோறும் நாட்காலைப் போதிலேயே அரசவைக்கு வந்து வீற்றிருக்கும் விழுச்சிறப்பு உடையவனும், தன் பகைவராம் . வேளிரொடு மேற்கொள்ள வேண்டிய போருக்காக, வாளை எப்போதும் உறைகழித்தே வைத்திருக்கும் விழிப்புடையானும் ஆகிய திதியன் என்பான் ஒருவனைப் பாடியுள்ளார் மாமூலனார்.

"பாணர் ஆர்ப்பப் பலகலம்உதவி
நாளவை இருந்த நனைமகிழ் திதியன்
வேளிரொடு பொரீஇயகழித்த
வாள்"

-அகம் : 331

தாம் விளைவித்திருந்த பயற்றை, அன்னி மிஞில் என்பாளின் தந்தை காத்திருந்த பசுநிரை மேய்ந்து விட்டது கண்டு சினங் கொண்ட கோசர், அவன் கண்களையே போக்கி விட்டாராகச், சினங்கொண்ட அவள், அக்கோசரை அழித்துப் பழி தீர்க்கும் வரை நல்ல உணவு உண்பதோ, நல்ல உடை உடுப்பதோ செய்யேன் என் வஞ்சினம் உரைத்து விட்டுத.வ.II-19