பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300

தமிழர் வரலாறு

(அகம் : 152), "ஆஅய் நன்னாட்டு அணங்குடைச் சிலம்பு:" (அகம் : 198}, ஆகவே, மோரியர் வருகை கூறும், உமட்டுர்க் கிழார் மகனார் பெருங்கொற்றனாரும் பரணர் காலமாம் கடைச்சங்கக் காலத்தவர் என்பது உறுதியாயிற்று.

ஆக, மோரியர் வருகையைக் குறிப்பிடும் மாமூலனார், கடைச்சங்க காலப் புலவரே அல்லது, கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிற்கும் பிற்பட்டவரல்லர் என்பது இவ்வகையாலும் உறுதி செய்யப்படுகிறது.

வருகையைக் குறிப்பிடும் இரண்டு இடங்களில், ஓரிடத்தில், மாமூலனார், அம்மோரியரை, "வம்பமோரியர்" (அகம் : 251) எனக்கறிப்பிட்டுள்ளார்.

"வம்பமோரியர்" என்ற தொடருக்குத் திரு. அய்யங்கார் அவர்கள் புதிய மோரியர் [Moriyar, who newly came” Page: 520.] எனப் பொருள் கொண்டு, "ஈண்டு மெளரியர் எனக் குறிப்பிடப்பட்டிருப்பவர், பாடலிபுத்திரத்தை ஆண்ட மெளரியர் இனத்து வழிவந்த ஒரு கிளையினராய்க் கி. பி. 597 ல் அரசாண்டிருந்த சாளுக்கிய இனத்து முதலாம் கீர்த்திவர்மனின் பகைவர்களாக இருந்தவராதலே வேண்டும். கோசர் தொடர்போடு, தமிழ்நாட்டில் படையெடுத்தவர். மோரியருள், இந்தப் பிற்கால மோரியர் ஆதலே இயலக் கூடிய ஒன்று. [The mauryas, perhaps the descendants of some branch of the Maurya dynasty of Padaliputra, and foes of Kirthivarman I of the Calukya dynasty (566-597 A. D.) These Mauryas were the only possible Moriyar, who in conjunctions with the Kosar, could have attempted a raid in to the Tamil Country” (Page : 522,] எனக் கூறி, மோரியர் படையெடுப்பையும், அதுகூறும் மாமூலனாரையும், கி. பி. ஆறாம் நூற்றாண்டிற்குத் தள்ளிவிட்டுள்ளார்.

தொகை நூல்களில் பல இடங்களில் பயில ஆளப்பட்டிருக்கும் வம்பு என்ற அச் சொல், அங்கெல்லாம், நிலையில்லாத என்ற பொருளில்தான் ஆளப்பட்டுளதே