பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழைய அரச இனங்கள் ஒளிகுன்றல்

313


அறிகிறோம். காவிரிப்பூம்பட்டினம் பற்றிய இவ்வருணனை மணிமேகலை இருபத்தைந்தாவது அதிகாரம், 199 - 204 வரிகளில் கூறப்பட்டிருக்கும் புகார் நகரத்துக் கடல் கோளும் மக்கள் அந்நகர் விட்டுப்போனதும், ஒன்று வெறும் கற்பனைக் காவியக்கதையாதல், வேண்டும், அல்லது ஐ ந் தா ம் நூற்றாண்டிற்குப் பின்னர் எப்போதாவது நிகழ்ந்திருக்க வேண்டும் என்பதையே உணர்த்துகிறது. கனகதாசன் போலும் ஆர்வலர்களால் அழகிய தவப்பள்ளிகள் பல கட்டப்பட்டுள்ளன. ஆதலின் கரிகாலன் காலத்திலிருந்து, காவிரிப்பூம்பட்டினத்தில், பெளத்த சமய வளர்ச்சி, நனிமிக விரைவுடையதாகும். சோழப்பேரரசை அகற்றி விட்டு அரியணை ஏறிய அரசனும், பெளத்த சமயத்தின் பால் ஆர்வம் உடையவனும், பெளத்தத் துறவிகளுக்காகத் தவப்பள்ளிகள் நிறுவுவதை ஊக்குவித்தவனும் ஆதல் வேண்டும். பூதமங்கலத்திலும் அது போலும் தவப்பள்ளிகள் காணப்படுகின்றன. ஆதலின், விநய விநிச்சகத்தில் அச்சுத விக்கந்தன் என அழைக்கப்படும் அவ்வரசன், சோழநாடு முழுவதிலும் கோலோச்சியதாகத் தெளிவாகத் தெரிகிறது. திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள இன்றைய பூதலூரே, அப்பூத மங்கலம் ஆதல் வேண்டும். இச்சிற்றுாரின் அணித்தாக வடக்கில் உள்ள பகுதிகள், புத்த தத்தரின் விளக்கங்களோடு ஒத்துள்ளன. தஞ்சை நாமக்கல் நெடுஞ்சாலையை அடுத்திருக்கும் இப்பகுதிகளில், பெளத்த, சமண சமயச்சார்புடைய பழம் பொருள்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அண்மைக்காலம் வரை, இப்பகுதி ஆரிய சமய விளக்க மையங்களைக் கொண்டிருந்தன.

அச்சுத விகண்டன், களப்பிரர் அரச இனத்தைச் சேர்ந்தவன். அந்நூலைப் பதிப்பித்த ஆசிரியர் களப்பிரர் அரச இனத்தைக் கேட்டறியாதவர் ; கதம்ப இனத்தை அறிந்தவர் ஆதவின், களப்பிரர் என்பதற்குப் பதிலாகக் கதம்பர் என்பதையே பாடமாகக் கொண்டுள்ளார். ஆனால் கதம்பர்களோ, வெகுதொலைவில் உள்ள பனவாசேவை ஆண்டவர்: அவர்கள் பெளத்தர்களும் அல்லர் ஆய்வுக்குரிய