பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்துப்பாட்டின் பிற்காலப் பாடல்கள்

323


இடங்கொண்டிருக்கும் இடத்தைப் போலவே கர்ப்பக்கிரகம் அதாவது அவ்வீட்டின் கருப்பை, அல்லது கருப்பையாகிய வீடு என்றே அழைக்கப்படும் ; கர்ப்பம், தமிழில் கருவாம். கரு எனப் பெயர் பெற்ற காண்பதற்கு இனிய நல்ல வீடு எனும் பொருளில், "கருவொடு பெயரிய காண்பின் நல்இல்" (நெடுநல் : 114) எனவந்துளது. பிறிதோரிடத்தில், நாற்பது என்ற தமிழ்ச்சொல், "தச" என்ற வடமொழிச் சொல்லும், நான்கு என்ற தமிழ்ச் சொல்லும் இணைந்த தொகைச் சொல்லாகிய "தச நான்கு" (நெடுநல் ; 115) என வந்துளது. வான வீதியில் கிரகங்கள் செல்லும் பாதை நன்கு விளக்கப் பட்டுளது. "உறுதி வாய்ந்த கொம்புகளை உடைய மேடராசி முதலாக, ஏனையராசிகள்" எனும் பொருளில் "திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக (நெடுநல் : 1.60) எனும் தொடர் வந்துளது. ஆடு என்பது மேஷம் என்பதன் தமிழ் மொழி பெயர்ப்பாம் ; மேஷம் என்ற அச்சொல்தானும், "அரைஸ்" என்ற கிரேக்கச் சொல்லின் மொழி பெயர்ப்பாம். "ரோகிணி" அதன் தமிழ் வடிவமாம் "உரோகிணி" என வந்துளது. (நெடுநல் : 163). ஆரியக் கருத்துக்கள், இவ்வாறு ஊடுருவத் தொடங்கிவிட்ட நிலையிலும், தமிழ்ப்பாடல்கள் இயற்கை வளங்களை விளக்குவதில், தம் இயல்பான இயற்கையோடு ஒட்டிய உண்மை நிலையினை இன்னமும் விடாது கொண்டு உள்ளன. இதோ ஒரு விளக்கம் : "பருவம் பொய்யாது பெய்யும் கார்முகில், தான் படிந்து கிடந்த மலையை வளைத்து எழுந்து, உலகத்தவரெல்லாம் குளிரால் நடுங்குமாறு, கார் காலத்துப் புதுமழையைப் பொழிய, இம்மழையால் பெருகிய வெள்ளத்தைப் பெருத்த வளைந்த கோலினைக் கையிலே கொண்டஇடையர், கொல்லேறுகளோடு கூடிய ஆனிரைகளை, மேட்டுப்பாங்கான வேற்று நிலங்களில் மேயவிடுத்து, தாம் வாழ்ந்த இடங்களைப் பிரிந்த தனிமைக்கு வருந்தி, காந்தள் மலரின் நீண்ட இதழ்கள் கொண்டு கட்டிய தலைமாலையிலிருந்து சொட்டும் நீர் அலைப்பதால் மேலும் கலக்கம் உற்று உடல் குளிர் மேலும் நடுங்கப் பண்ணவே, அக்குளிர் போக்க பலரும் ஒன்று கூடியிருந்து நெருப்புக் கனலைக் கைகளில் விடாது