பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

326

தமிழர் வரலாறு


முல்லைப்பாட்டு:

கணவன், போர் மேற்கொண்டு வேற்று நாட்டில் இருந்த போது, மனையகத்தே தனித்திருந்து காதல் நோயால் தாக்குண்ட மனைவியின் துயர்க்கொடுமையைப் பாடுகிறது இம்முல்லைப்பாட்டு [முல்லைப்பாட்டின் பாட்டுடைத் தலைவன், தன் பாசறைக் கண், மற்றவர்களோடு யவனர்களையும், மிலேச்சர்களையும் பணியில் அமர்த்தியிருந்தான் என்றும், அதனால், அப்பாசறைக்கண் பலமொழிகள் பேசப்பட்டன என்றும் கூறுவதல்லது, பாட்டுடைத் தலைவன் யார் என்பது குறித்து, அப்பாட்டின் ஆசிரியர் நம்பூதனார் எவ்விதக் குறிப்பும் தந்திலர். இப்பாட்டிலும், ஆரியக்கருத்துக்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக அல்லாமல், நிறையவே இடம்பெற்றுள்ளன. பண்டைத் தமிழ்க் கடவுளாம் மாயோன் விஷ்ணுவாகவே, முழு அளவில் அடையாளம் காட்டப் ப ட் டு ள் ளா ன். "ப ர ந் து அ க ன் ற உ ல கை வளைத்துக் கொண்டு, சக்கரப்படையோடு சங்கையும் கையில் ஏந்தி, திருமகளை மார்பிலே கொண்டு, மாவலி வார்த்த நீர், கையில் வீழ்ந்த அளவே பேருருக்கொண்டு வானளாவ உயர்ந்த திருமால் போல என்ற உவமையினைக் காண்க.

"நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை

நீர்செல நிமிர்ந்த மாஅல் போல"
-முல்லை : 1 - 3.

மற்றோர் உவமை, "ஆடையைக் காவியில் தோய்த்து உடுத்திய தவவேடம் தாங்கிய பார்ப்பனன், தன் தோய்த்த ஆடையின் ஈரம் போகத் தன் முக்கோவின் மீது போர்த்தியிருப்பதைக் குறிக்கிறது :

"கல் தோய்த்து உடுத்த, படிவப் பார்ப்பான்

முக்கோல் அசைநிலை கடுப்ப"
- முல்லை : 37 - 38

{{Nop}}