பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

334

தமிழர் வரலாறு


மலைவளக் காட்சியின் விளக்கம், அப்பாடலுக்கு அவர் செலவிட்ட வரிகளினும் நீண்டது. தொடக்க வரிகள், அம் மலைநாட்டு, ஒரு இசைக் கருவிகளின் தொகுப்பையே விள்க்கிக் காட்டுகின்றன. "வ ள த் தை ப் பெருக்கும் மழையைப் பெய்த இருண்ட வானத்தில், மேகம் இடித்து முழங்கும் ஓசை போன்று பல்வேறு பண்களும் தன்னிடையே எழுவதற்கு ஏற்பவாரால் இறுக வலிக்கப்பட்ட மத்தளத்தோடு, சிறு பறையும், நன்குகரைய உருக்கித் தகடாகத் தட்டின கஞ்சதாளமும், ஒளிவிடும் கரிய மயிர்ப்பீலி கட்டிய கொம்பும், யானை நெட்டுயிர்த்தாற்போல பேரொலி எழுப்புதற்கேற்ப, கண்களின் இடையே துளை செய்யப்பட்ட நெடுவங்கியமும், இளி என்னும் இசையை எழுப்பும் குறுவடிவான சிறந்த தூம்பும், பாடும் பாட்டைச் சுருதி கெடாமல் சர்த்து இசைக்கும் இனிய குழலும், கண்களுக்கு நடுவே நின்று ஒலிக்கும் அரித்து எழுகின்ற ஓசையையுடைய கரடிகையும் தாளம் கெடாமல் ஒலிக்கும் வலிய வாயையுடைய சல்வியும், மாத்திரையை எண்ணி ஒலிக்கும் ஒருகண் மாக்கிணையும், எடுத்துக் கூறப்படாத வேறு இசைக்கருவிகளும் இட்டுக் கட்டப்பட்டு, கார்காலத்து மழையால் பழுத்த பலாவின் காய் பல நெருங்க இருக்கும் கொத்தே போல், தொங்கவிடப்பட்டமை."

"திருமழை தலைஇய இருள்நிற விசும்பின்
விண்ணதிர் இமிழ் இசை கடுப்பப் பண் அமைத்துத்
திண்வார் விசித்த முழவொடு, ஆகுளி,
துண் உருக்குற்ற விளங்கு அடர்ப் பாண்டில்,
மின் இரும்பீலி அணித்தழைக் கோட்டொடு,
கண்ணிடை விடுத்த களிற்று உயிர்த் தூம்பின்,
இளிப்பயிர் இமிரும் குறும்பரந் தூம்பொடு,
வீளிப்பது கவரும் தீங்குழல், துதைஇ
நடுவு நின்று இசைக்கும் அரிக்குரல் தட்டை,
கடி கவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி,