பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்துப்பாட்டின் பிற்காலப் பாடல்கள்

339


மை என விரிந்தன நீள்நறு நெய்தல் ;
செய்யாப் பாவை வளர்ந்து கவின்முற்றிக்
காயம் கொண்டன இஞ்சி ; மா விருந்து
வயவுப்பிடி முழந்தான் கடுப்பக் குழிதொறும்
விழுமிதின் வீழ்ந்தன கொழுங்கொடிக் கவலை:
காழ்மண்டு எஃகம் களிற்றுமுகம் பாய்ந்தென
ஊழ்மலர் ஒழிமுகை உயர்முகம் தோயத்
துறுகல் சுற்றிய சோலை வாழை ;
இறுகு குலை முறுகப் பழுத்த பயம்புக்கு
ஊழுற்று அலமரும் முந்துாழ் ; அகலறைக்
காலம் அன்றியும் மரம்பயன் கொடுத்தலின்
காலின் உதிர்ந்தன கருங்கனி நாவல்:
மாறுகொள ஒழுகின ஊறுநீர்உயவை:
நூறொடு குழியென கூவை: சேறுசிறந்து
உண்ணு நர்த் தடுத்தன தேமா ; புண்அரிந்து
அரலை உக்கன நெடுந்தாள் ஆசினி :
விரல்ஊன்று படுகண் ஆகுளி கடுப்பக்
குடிஞை இரட்டும் நெடுமலை அடுக்கத்துக்
கீழும் மேலும் கார்வாய்த்து எதிரிச்
சுரஞ் செல் கோடியர் முழவில் துாங்கி

முரஞ்சு கொண்டு இறைஞ்சின விலங்குகினை பலவே"
-மலைபடு 100-144.

இயற்கைப் பொருட்களின் இயல்பை உள்ளவாறே விளக்கிக் கூறும், அழகிய தனி வரிகளை, இப்பாடல் கொண்டுளது . ஆனால் அத்தகைய வரிகள், எடுத்துக்காட்டலாகாவாறு மல்கி உள்ளன. நிமிர்ந்து நிற்கும் நெடியமலையின், தெய்வமும் விரும்பும் பக்கமலையின்கண், தேர்ச்சக்கரம் போல் தொங்கும் தேன்கூடுகள். "நேர்கொள் நெடுவரை, நேமியில் தொடுத்த சூர்புகல் அடுக்கத்துப்பிரசம்"