பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

340

தமிழர் வரலாறு


(238 - 289) "பச்சைப் பசேல் என்ற அகன்ற காட்டில், மிக்க வலியும் கடுஞ்சினமும் வாய்ந்த களிறுகளின் வலியை விழுங்கிக் கெடுக்கவல்ல, பெருமரக்கிளை போலும் மலைப்பாம்பு" "அகன்பை அங்கண், மைந்துமலி சினத்த களிறு மதன் அழிக்கும் துஞ்சு மரம் கடுக்கும் மாசுணம்" (256-62) ‘ "கிளைகள் பலகிளைத்து முற்றிய பரந்த ஆலமரத்தில், இசைக்கருவிகள் பலவும் ஒன்று கூடி இசை எழுப்பினாற்போல் குரல் எழுப்பும் பறவைக் கூட்டம்." -கோடுபல முரஞ்சிய கோளி ஆலத்துக் கூடுஇயத்தன்ன குரல் புணர்புள்" (268-692) "வழக்கமாக நீராடும் நிலைத்துறையை விடுத்து ஆழத்தில் சிக்கி நீருள்ளே மூழ்குவாரைக் காக்க, நீருள் விரைந்து பாய்வாரைப் போல" - "நிலைத்துறை வழீஇய மதன் அழி மாக்கள், புனல் படுபூசலின் விரைந்து வல்எய்தி." (280-281) புலி பாய்ந்தமையால் தம் கணவர் மார்பில் உண்டான புண்ணை ஆற்றும் காவல் என்று கருதி, அறல் போலும் கூந்தலையுடைய கொடிச்சியர் பாடும் பாடல்"-"கொடுவரிப் பாய்ந்தெனக் கொழுநர் மார்பின் நெடுவசி விழுப்புண் தணிமார் காப்பென, அறல்வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல்." (302-304) மலையேற வல்லதான முசுக்கலையும் ஏறமாட்டாது கைவிடப்பட்ட, காட்சிக்கு இனிய நெடிய மலை உச்சியில், நிலையாகச் சார்த்திய கண்ணேனி வழியே ஏறிச் சென்று, பெரும்பயன் பெறத் தேனீக்கள் திரட்டிவைத் திருக்கும் தேனை அழித்துக் கொண்ட கொள்ளை". -"கலை கையற்ற காண்புஇன் நெடுவரை நிலைபெய்து இட்ட மால்பு நெறியாகப் பெரும் பயன் தொகுத்த தேம்கொள் கொள்ளை". (315 - 317) "கரிய நிறம் வாய்ந்த பெரிய மலை உச்சியில் பஞ்சு போல் படர்ந்து"-"மைபடு மாமலைப் பனுவலின் பொங்கி" (361) நன்னன், சேயாறு பாயும் பள்ளத்தாக்கு நாட்டை ஆண்டான்.

சிறுபாணாற்றுப்படை : மலைபடுகடாம், வறுமையுற்ற புல்வர்களைப் பரிசில்பெற நன்னல்பால் போகுமாறு கூறுவது போல், சிறுபாணாற்றுப்