பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

385


களுக்குவள்ளுவர் பட்டிருக்கும் கடமைமீதான திறனாய்விலிருந்து அவர் காலத்தைக் குறிப்பிடுவது இயலாது.

எண்ண இயலாது கிடக்கும் எடுத்துக்காட்டுக்களிலிருந்து கீழே காட்டப்படும் சில, அக்கடமைப்பாட்டினை உறுதி செய்யும்,

‘’இல்லறத்தோடு கூடி வாழ்பவன் என்று சொல்லப் படுவோன் எவன் என்றால், அற இயல்பினை உடைய ஏனைய மூவர்க்கும் அவர்கள் செல்லும் நல்லொழுக்க வழிகளில், தளராது நிற்கும் துணையாவான் எவனோ, அவன்‘’ என்கிறது குறள்,

“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை'’
-குறள் : 41 :

‘’நல்லொழுக்க நெறியாலும், உணவு வழங்கலாலும் ஏனைய நெறிகளில் நிற்கும் மூவரையும் நாள்தோறும் காத்து வருபவன் இல்லறத்தானே ஆதலின், அவன் வாழ்க்கையே தலையாய சிறப்புடையது’ என்கிறது. மானவ தர்ம சாஸ்திரம்.’’ -

‘’யஸ்மாத்ரயோ ப்யாசரமினோ ஞானே நாந் நேந
சான்வஹம்
க்ரஹஸ்தெ நைவ தார்யந்தே த ஸ்மாஜ்யெ
ஷ்டாஸ்ரமொக்ரஹி’
-மனு 3 78.

‘’ஒருவன் ஒரு பிறப்பில், ஐம்பொறிகளையும், ஆமை போல அடக்க வல்லனாயின், அவ்வடக்கும் ஆற்றல் அவனுக்கு ஏழு பிறப்பிலும் காவலாக இருக்கும்’ என்கிறது குறள்:

‘’ஒருமையுள் ஆமைபோல் ஐந்து அடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்தது.‘’ -குறள் : 126.

த. வ. 11-25