பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

396

தமிழர் வரலாறு

அவ்வகையில், செங்குட்டுவன் கடந்து சென்றிருக்கவேண்டிய, தக்கணம், விந்தியமலைச்சாரல், கங்கைப் பெருவெளிகளின் இயற்கைக் காட்சிகளை விளக்கிக் கூறும், ஒரு பொன்னான வாய்ப்பினை ஆசிரியர், கை நழுவ விட்டுள்ளார். மேலும், பெளத்தர்களால் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்டபோன, பிறப்பின் உயிர் வாழ்க்கை பற்றிய கதைகள் இதில் மிகுந்து உள்ளன. ஆகவே, இந்நூலின் யாப்பிலக்கண அமைதியின் திறனாய்வு மூலமும், சொல் நடை, உவம உருவக அணிகளின் ஆட்சிமுறையை ஆராய்வதன் மூலமும், இம்மூன்றாம் காண்டமும், முதல் இரு காண்டங்களின் ஆசிரியராலேயே இயற்றப்பட்டதுதானா என்பதைத், தகுதி வாய்ந்த தமிழ்ப் பேராசிரியர்கள் திறனாய்வுசெய்து காணவேண்டும் எனக் கருத்தறிவிக்கின்றேன்.

செங்குட்டுவன்

செங்குட்டுவன், மூன்றாம் காண்டத்துப் பாட்டுடைத் தலைவன். நூலாசிரியர், இவனைப் பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்து ஆசிரியர் பரணரின் பாட்டுடைத் தலைவனான கடல் பிறக்கு ஒட்டிய வேல்கெழுகுட்டுவனாகக் கொண்டு, அப்பத்தில் அக்குட்டுவனுக்குக் கூறப்பட்டிருக்கும் பெருஞ் செயல்களை இவனுக்கும் உரியனவாக ஏற்றிக்கூறியுள்ளார். ஆனால், செங்குட்டுவன் என்ற பெயரோ, அவனுடைய வட இந்தியப் படையெடுப்போ பத்துப்பாட்டில் குறிப்பிடப்படவில்லை. குட்டுவன், சேரல் போல்வன, கிள்ளி, வளவன் போல்வன சோழ அரசர்களின் பட்டப்பெயர்கள் ஆதல் போல, செம்பியன் வழுதி போல்வன. பாண்டிய அரசர்களின் பட்டப்பெயர்கள் ஆதல் போல, குட்டுவன். சேரல் போல்வன. சேர அரசர் அனைவர்க்கும் வழங்கும் பொதுவான பட்டப் பெயர்களாம். யாரேனும் ஒரு அரசனுக்கு ஒரு குறிப்பிட்ட பெயர் கொடுக்கப்பட வேண்டுமாயின் [சிறப்பிலா வெறும் காரணங்களுக்கு, வெறும் குலப்பெயர் மட்டுமே போதும். ஆதலாலும், பொதுவாக அரசர்களின் இயற்ப்பெயர்களை ஆள்வதற்கு எதிர்ப்பான ஒரு பொது உணர்வு நிலவுவதாலும்