பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

395

இவ்விழாவின் பல்வேறு நிகழ்ச்சிகளாவன : கல் எடுத்தல், அக்கல் மீது உருவம் வரைதல், கல்லை நீராட்டல், நிலத்தில் நடுதல், வழிபாடு செய்தல், இறுதியாக வாழ்த்தல். இதற்கேற்ப, இப்பொருள் பற்றிக்கூறும் மூன்றாம் காண்டத்தின் அதிகாரங்கள், முறையே, காட்சிக்காதை, கால்கோள்காதை, நீர்ப்படைகாதை, வழிபாடாம் சிறப்பிற்பெரும் படையினை உள்ளடக்கிய நடுகற்காதை, மற்றும் வாழ்த்துக் காதையாம். இவ்வகையால், இம்மூன்றாம் காண்டம், தொல் காப்பியம், இலக்கியம் கண்டதற்கு இலக்கணமாம் நிலையிலிருந்து, இலக்கியங்களுக்கு இலக்கணம் வகுக்கும் நிலைக்கு மாறிவிட்ட காலத்தைச் சேர்ந்தது ஆகிறது.)

ஆகவே, மூன்றுவது காண்டம், எந்தவிதத் தகுதியாம் உரிமையோடும், சிலப்பதிகாரம்-சிலம்புபற்றிய நூல்—என அழைக்கப்படுதல் இயலாது. முதல் இரு காண்டங்களாம். ஒரு முழு நூலை இயற்றிய ஆசிரியர், காற்சிலம்பைத் தம் கருத்துக்கு அப்பாலும் துரத்திவிட்ட பின்னர், தம்முடைய பாட்டுடைத் தலைவன் தலைவியரை வானுலகிற்கு வழி அனுப்பி வைத்துவிட்ட பின்னர், ஒரு செங்குட்டுவன் புகழ்பாடுவதே தன்னுடைய தலையாய குறிக்கோளாகக் கொண்ட மூன்றாம் காண்டத்தை இணைப்பதன் மூலம், தம் காவியக் கட்டுக் கோப்பினை, வேண்டுமென்றே சிதைத்து விடுவாரா என்ற கேள்வி, ஆய்வுக்கு உரியதாகும். அத்துணைப் பெரும் புலவர், தம்முடைய நூலை, அவ்வாறு கெடுத்து விடுவார் என நான் எண்ணவில்லை. மேலும், முதல் இரு காண்டங்களில் ஒளிமறைவு காய் மறைவாகப் பின்னணியில் இருந்த இயற்கை கடந்த இறைமை நிகழ்ச்சிகள் இம்மூன்றாம் காண்டத்தில், தனிமிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. மேலும். முதல் இரு காண்டங்களில், கோவலனும், கண்ணகியும், புகாரிலிருந்து, சீரங்கம் வழியாக, மதுரை சென்ற நாடு, பற்பல காதைகளில், மிகமிக நுண்ணிதாக, நனிமிக அழகாக விளக்கப்பட்டுள்து. ஆனால், மூன்றாம் காண்டித்தில், நீலகிரியை விட்டு நீங்குகின்றான் செங்குட்டுவன்: அடுத்தகணமே, கங்கைக் கரையில், காணப்படுகின்றான்: திரும்பும் போதும் அதுவே நிலை.