பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.பி. 600க்கு முத்திய எஞ்சிய இலக்கியங்கள்

405


ஆதார நூலாகவும் கொள்வது போலாம்; இன்றைய இலக்கியத் திறனாய்வு, வரலாற்றுத் திறனாய்வு விதிமுறைகளை நன்கு உணர்ந்த தமிழ்ப் பேராசிரியர்களை. இதுபற்றி மேலும் ஆய்வு செய்து, ஒன்று, இதை உறுதி செய்யுங்கள்: அல்லது ஏலாது என மறுத்து ஒதுக்குங்கள் என வேண்டிக் கொள்கிறேன்; பாயிரங்களும், முடிவுரை போல வரும் கட்டுரைகளும், உரை பெறு கட்டுரைகளும், பிற்கால எழுத்தாளர் ஒருவரால் எழுதப்பட்டனவாதலின், இவ்வினா குறித்த ஐயப்பாட்டினைத் தீர்ப்பதில், சிறிதளவே துணை புரிய இயலும்.