பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

410

தமிழர் வரலாறு

கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சியது” என எழுத்துக்குறை ஏதும் இன்றி, அப்படியே அழற்படு காதையிலும் இடம் பெற்றுளது.

உண்மை நிலை இதுவாகவும், சிலப்பதிகாரத்து மதுரை மன்னன் செழியன் என்பதைக் கட்டுரைதான் கூறுகிறதே அல்லது, மூலத்தில், இளங்கோவடிகளார் ஓரிடத்திலும் கூறவில்லை என்ற திரு பி. டி. எஸ். அவர்களின் கூற்றில் உண்மை இல்லை என்பது தெளிவாம்;