பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.பி.600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

417


தான், செங்குட்டுவன் வடநாட்டுப் படையெடுப்பு பரணர் பாக்களில் இடம்பெறவில்லை. அங்ஙனமாயின், பரணர்பாடிய ஐந்தாம்பத்திற்கு முன்வரும் பதிகம், அந்நிகழ்ச்சியையே முதற்கண் வைத்து வரிசைப்படுத்தியுளது எவ்வாறு பொருந்தும் எனக்கேட்டல் கூடும், ஐந்தாம்பத்தில் உள்ள, பாக்கள் பத்து மட்டுமே பரணர் பாடியன; அதன் பதிகம் அவர் பாடியதன்று : அவருக்குப்பின் வந்த, அவர்பாக்களைத் தொகுத்த யாரோ ஒருவர் பாடியது, அது. ஆகவே, செங்குட்டுவன் வட நாட்டுப் படையெடுப்பு உண்மை நிகழ்ச்சியாயின, பரணர், அதைப் பாடியிருப்பார் : அவர் அது பாடவில்லை : ஆகவே, அது உண்மை நிகழ்ச்சி அன்று: வெறும் கட்டுக்கதை என வாதிடுவது முறையான வாதம் ஆகாது. இது, '‘இருக்கு வேதத்தில் ஆலமரம் குறிப்பிடப் படவில்லை என்பதால், அவ்வேதம் எழுதப்பட்ட காலத்தில், ஆலமரம் என்பதே இந்தியாவில் இல்லை என்ற வாதம் சரியான வாதம் ஆகாது எனத் திரு.அய்யங்கார் காட்டும், திரு, பர்கிதர் அவர்களின் கூற்று போல் சரியான வாதம் ஆகாது.

"Speaking of the argument from silence Pargiter remarks, ‘One might argue with more force that, bacause the banyan, the most characteristic tree of India, is not mentioned in the Rig. veda, there were none in India, when the hymns were composed". (History of the Tamils 124: Foot Notel].

ஒருவனுக்கு இருபெயர் இட்டு அழைப்பது பண்டைய வழக்கம் அன்று என்பதும் சரியாகாது, இயமவரம்பன் நெடுஞ்சேரலாதனைப், பதிற்றுப் பத்து நான்காம்பத்தின் பதிகமும், இரண்டாம் பத்தின் ஆசிரியர் குருட்டூர்க் கண்ணனாரும் (பதிற்றுப்பத்து 1, 5, 8, 10) மாமூலனாரும் (அகம்: 127, 347) சிறப்பு அடை எதுவும் கொடாமல், சேரலாதன் என்றே அழைத்தாலும், பதிற்றுப் பத்தின்

த.வII---27