பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.பி. 600க்கு முத்திய எஞ்சிய இலக்கியங்கள்

423


1) முதல் இரு காண்டங்களில், அங்கொன்றும் இங்கொன்றுமாக, இலை மறைவு காய் மறையாகப் பின்னணியில் இடம்பெற்றிருந்த, இயற்கையொடு பொருந்தாச் செய்திகள், மூன்றாம் காண்டத்தில், பெருவாரியாகச் சிறப்பிடம் பெற்றுள்ளன.

“Moreover the supernatural, so much in the background in the first two Cantos, is very prominent in the third” (page: 599.)

2) முதல் இரு காண்டங்களில், கண்ணகியும் கோவலனும், புகாரிலிருந்து, சீரங்கம் வழியாக மதுரைக்குச் செல்வழிக் கடந்து சென்ற நாட்டின் இயற்கை வளம், பல காதைகளில், மிக மிக நுண்ணிதாகவும், நனி மிக அழகாகவும் விளக்கப் பட்டுளது. ஆனால், மூன்றாம் காண்டத்தில், செங்குட்டுவன், நீலகிரியை விட்டுப் புறப்படுகிறான் : உடனே கங்கைக் கரையில் காட்சி அளிக்கின்றான். திரும்பும் போதும் அதே நிலை: செங்குட்டுவன் கடந்து சென்றிருக்கவேண்டிய தக்காணம், விந்தியம், கங்கை வெளிகளின் இயற்கைக் காட்சிகளை விளக்கிக் கூறும் பொன்னான வாய்ப்பினை ஆசிரியர் புறக்கணித்துள்ளார்:

“In the first two Cantos, the country through which . Kovalan and kannagi travelled, from Pugar to Madurai, Via Srirangam, is minutely and beautifully described in several chapters, whereas in canto III, Senguttuvan leaves the, Nilagiri and then immediately appears on the banks of the Gangas and vice versa on the return journey; Thus the author avoids the splendid opportunities of describing the scenery of the Deccan, the Vindhyas, and the gangetic valley, through which Senguttuvan ought to have passed.”—page : 599.

3} பெளத்தர்களால் பரப்பி விடப்பட்ட, போன பிறவி பற்றிய கட்டுக்கதைகள், இக்காண்டத்தில், எண்ணிலாதன: