பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

452

தமிழர் வரலாறு


இவ்வாறு கூறினார்’ என் விளக்கம் அளித்து, திருக்குறளின் முழுமுதற்தன்மையை நிலைநாட்டியுள்ளார்.

மனுதர்ம சாஸ்திரம், அத்தியாயம் 10 ல் 8 முதல் 130 வரையான சுலோகங்களில், ‘’இறப்ப வரும் வழி இளிவந்தன செய்தாயினும் உய்க’' என்கிறது; இதைத் திருவள்ளுவர் ‘'இன்றி யமையாச் சிறப்பின ஆயினும், குன்ற வருப விடல்’' (961) என்ற குறட்பாவில் மறுத்துள்ளார். இறப்பவரும் வழி இளிவந்தன செய்தாயினும் உய்க என்னும் வடநூல் முறைமையை மறுத்து, உடம்பினது நிலை இன்மையையும், மானத்தினது நிலையுடைமையும் துாக்கி அவை செய்யற்க என்பதாம்’' எனப் பரிமேலழகர் அளிக்கும் விளக்கம், திருவள்ளுவர், ஒரு முழுமுதல் ஆசிரியனே என்பதை உறுதி செய்வது காண்க,