பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
29 ஆம் அதிகாரத்தின் பின் இணைப்பு-5
மூவேந்தர் இமயப் படையெடுப்பு.


கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் தமிழ்ப்புலவர்கள். தமிழரசர்கள். இந்தியப் பெரு நிலப்பரப்பு அனைத்தையும். வெற்றி கொண்டதாகவும், அவ்வாறு வெற்றி கொண்ட. அரசர் ஒவ்வொருவரும், தத்தம் கொடிகளை நாட்டுவதினும். வெற்றியின் நிலையான நினைவுச் சின்னமாம் தம் அரச இலச்சினைகளை இமயத்தின் மீது பொறித்ததாகவும் கற்பனைக் கதைகளைக் கண்டு பிடித்துவிட்டனர். இவ் வெற்றிச் செயல் முதன் முதலின் கரிகாலனுக்கு உரிமையாக்கப் பட்டது. பின்னர்ப் பிறர்க்கும் விரிவாக க்கப்பட்டது. தமிழர் ஆட்சியைத், தமிழ் நாட்டு எல்லைக்கு அப்பாலும் விரிவாக்கிய முதல் தமிழ் அரசன் கரிகாலன். தமிழ்ப் புலவர்களின் நில இயல்பற்றிய கொள்கை தெளிவற்ற ஒன்றாதலின், தமிழ்நாட்டு எல்லைக்கு அப்பாற்பட்ட எதுவாயினும், அவர்களுக்கு, அது, கங்கை வெளியையும், இமயச்சாரலையும் சார்ந்ததாகிவிடும். ஆகவே, ஒரு தமிழ் அரசன், உண்மையாக அல்லது கற்பனையாகத் தமிழ்நாட்டு எல்லைக்கு அப்பால், ஆட்சியாதிக்கம் பெற்றிருந்தால், அவன் இமயத்தில் அரச இலச்சினையைப் பொறித்து விடுகிறான் ! அவ்வகையில் கரிகாலன் தன் புலியைப் பொறித்தான் : நெடுஞ்சேரலாதன் வில்லைப் பொறித்தான் பெயர் அறியாப் பாண்டியன் ஒருவன் மீனைப்பொறித்தான். “[Tamil poets invented legends about Tamil kings conquering the whole of India and each of them carving his emblem on the Himalayas a more permanent sign of conquest than planting a flag. This feat was attributed first to karikal and then extended to others. As the geographical notion of the Tamil bards were of a nebulous kind, to them, whatever is not ‘home”, is “abroad'’. So, when a Tamil king possessed