பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

462

தமிழர் வரலாறு


மாகாணத்தில் அடங்கியுள்ள வச்சிர, மகத நாடுகளுக்கு வெகுதுரமில்லாததாய், இமயத்தைக கடந்து செல்வதற்கு ஏற்ற வழியுடைய பிரதேசங்களுள், விக்கிய, பூட்டான்களுக்கு இடையில் உள்ள கனவாய்களே சிறந்தவை. விக்கிம ராஜ்யத்துக்குக் கிழக்கே, அதற்கும், திபெத்துக்கும் உள்ள எல்லையை வரையறுத்து நிற்கும் மலைத் தொடரானது செங்குத்தாய், ஆகாசத்தை அளாவிக் கொண்டு பெருங் கோட்டை மதில்போல் நீண்டு செல்கின்றது. இம்மலைத் தொடரை அடுத்துச் செல்லும் கணவாய், சமுத்திரமட்டத்திற்குமேல் 14500 அடி உயரமுயை தாய் திபெத் பிரதேசமாகிய சுப்பிப் பள்ளத்தாக்கிற்குக் கொண்டுபோய் விடக் கூடியது. இம்மலைக்கும். இதனை அடுத்த கணவாய்க்கும் வழங்கும் பெயர்கள் கவனிக்கத்தக்கன. சோழ மலைத்தொடர் (Chola Range), சோழர் கணவாய் (Chola Pass) என்பன. அவற்றிற்கு இன்றும் வழங்கிவரும் நாமங்களாகும்; 1) Imperial gazetteer of india: Sikkim ; Vol. 10 Page : 327 Vol. 22: Page : 365. 2) Hand gazettees of India • Chole Pass. 3) Encyclopaedia Britannica: Sikkim ; Vol. 5 P. 667 Vol. 20 P. 640), மேற்கூறியவற்றைக் கொண்டு நோக்குமிடத்து, இமயப் பகுதி ஒன்றிற்கு வழங்கும் இப்பெயர், சோழன் தொடர்பு பற்றி வந்ததாகக் கூடாதோ, என்பதே என் ஆராய்ச்சி. இம்மலையடியாகவே, இதனை அடுத்துள்ள கணவாயும் அப்பெயர் பெற்றிருக்கவேண்டும். சோல (Chola) என்பதற்கு விக்கிம் திபெத் பாஷைகளில் வேறு பொருள் இருப்பதாகத் தெரியவில்லை. ‘லா'’ என்பதற்குத் திபெத் பாஷையில் கணவாய் என்ற பொருள் உண்டு. நது-லா (Nattu-la) ஜெலப்-லா (Jelap-la) எனக்காண்க. ஆனால், “Gsira’’’ (Chola) என்பது. அவ்வாறு இரு சொல்லுடையதன்றி, ஒரு சொல்லாகவே மலைக்கு வழங்கி வருவதும், அச்சொற்கு வேறு பொருள் காணாமையும் நோக்கத்தக்கன. அதனால், திருமாவளவன், அப்பிரதேசத்தைக் கைப்பற்றி ஆங்குள்ள மலைச்சிகரத்தில் தன் புலிப்பொறியை நாட்டி, அங்கே தன்னாணையை நிறுவிய காலமுதலே, அம்மலை,