பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழமை புதுமைகளின் இணைப்பு

491


கெடுத்து விடுமளவு கோயில்கள், அமைப்பு நிலையில், அத் துணைச் சிக்கல் உடையவாகி விட்டன. இச் சோழர் முறைக் கோயில்கள் சில, பிற்காலத்தில் முழுமையாக இடிக்கப் பெற்றுப், பெரிய அளவில் கட்டப் பெற்றன. சில கோயில்களைப் பார்த்து இவை நனிமிகப் பழமை வாய்ந்தவை எனக் கூறும் போது, அக் கோயில்களின் அடிமனை, கல்லாலோ, சுதையாலோ, மரத்தாலோ ஆன தெய்வத் திருமேனிகள் ஆகிய இவை மட்டுமே பழமையானவை ; கட்டிடம் அன்று என்றே நாம் கொள்ள வேண்டுமளவு, கோயிலை இடித்துப் பெரிதாக்கும் முறை நம் காலத்தும் தொடர்கிறது;

பக்தி வழிபாடு :

கட்புலனாகா அருவ நிலையிலும், கட்புலனாகும் உருவ நிலையே தமிழர் உள்ளத்தை நனி மிக ஈர்க்கவல்லது என்பதும், இறைவன், மக்களுக்காக இவ்வுலகில் படைத்திருக்கும் இன்பங்களை நுகர்வதைப் பாவமாக எண்ணாத அளவு, தமிழர்கள், எதிலும் நலமே காணும் நிலையில், நிலை குலையா உறுதிப் பாடுடையவர் என்பதும், பொறிகளால் நுகரப் படவேண்டிய சுவை ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் போலும் இவை துறக்கப்பட வேண்டியதற்காகவே படைக்கப் பட்டதாகத் தமிழர்கள் கருதுவதில்லை என்பதும், ஆகவே தான், அவர்கள், இந்நிலவுலக இயல் கூறும் இயற்கையோடு இயைந்த பாடல்களையே, தம்மிடையே வளர்த்துக் கொண்டனர் என்பதும், இந்நூல் பல இடங்களில் அடிக்கடிச் சுட்டிக்காட்டப் பெற்றன. ஆகவே, உடற்றுன்பம் உயிர்த் துன்பங்களிலிருந்து மக்களைக் காத்தற்பொருட்டு, விஷ்ணுவும் சிவனும் மக்கள்வடிவம் தாங்கி அவ்வப்போது வந்த எண்ணற்ற வியத்தகு கதைகள் தமிழர்களிடையே வைக்கப் பட்டபோது அவர்கள், அவ்விரு கடவுள்களில், ஏதேனும் ஒன்றின் பால் உணர்ச்சி வயப்பட்டு ஒன்றிவிட்டது எதிர்பார்த்திருக்கக் கூடியதே பவுத்த சமண வழிபாட்டு நெறிகளும், வடநாட்டில் முதன் முதலாகத் தோன்றியபோது அவை தம்மைத் தோற்றுவித்த மக்கள் வடிவினராம்