பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

592

தமிழர் வரலாறு

 இவ்வாறொல்லாம் கூறியிருப்பதன்மூலம், தமிழ் இலக்கியத் தோற்றம் கி.மு. 1000 என்பதையும், தமிழ் இலக்கியத் தோற்றித்தின் கருப்பொருளாம் தமிழ்ர் வாழ்க்கை முறை, கி.மு. 2000க்கு முன்பே முழுவளர்ச்சி பெற்றுவிட்டது என்பதையும், தமிழகத்தில் அடியிட்ட அகத்தியர், முழுவளர்ச்சி பெற்ற மொழி, இலக்கியங்களையே கண்டார் என்பதையும், தாம் கண்ட அம்மொழிக்கான இலக்கணத்தை வகுத்த அவ்வளவே அவர் செய்த தமிழ்ப்பணி என்பதையும், எழுத்து என்றால், ஒலிவடிவ எழுத்து, வரிவடிவ எழுத்து இரண்டையும் குறிக்கும் என்பதையும், அகத்தியர் எழுத்துக்கு இலக்கணம் வகுத்தமையால், அவர் காலத்துக்கு முன்பே, தமிழ் எழுத்து முறை இருந்திருக்க வேண்டும் என்பதையும், தம் நூலின் பல்வேறு பகுதிகளில் ஒப்புக் கொண்டிருக்கும் திருவாளர். அய்யங்கார் அவர்கள், அதே நூலில், வேறு சில பகுதிகளில் கீழ்வருவனவற்றையும் கூறியுள்ளார்.

“ஆரியர்கள், தென்னிந்தியாவில் வந்து வாழத் தொடங்கியது மட்டுமல்லாமல், தமிழ் மொழி, தமிழிலக்கியங்களைக் கற்று, அம்மொழி இலக்கணங்களையும், அம் மொழியில் யாக்கப்பட்ட பாக்களையும் ஆராயத் தொடங்கிய பின்னரே, தமிழ் இலக்கியம், எழுத்து வடிவம் பெறத் தொடங்கிற்று.”

“It was only after the Arayas, not only settled in the South but began to study the Tamil language and literature and to investigate the grammar of that language, as well as of the poetry composed in it. that Tamil literature came to be committed to writing” Page : 152.

கிடைக்கக் கூடிய அகச்சான்றுகளின்படி. கி. மு. மூன்றாவது நூற்றாண்டின் இறுதியில் அல்லது இரண்டாவது நூற்றாண்டின் தொடக்கத்தில், கல்வெட்டு வடிப்பதில் நீடித்துப் பயின்று, அழியாப் பயிற்சி பெற்றுவிட்ட வெளி