பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

506

தமிழர் வரலாறு


அவை எருதுவுக்கும் உண்மையால்; நான்கு காலும், நீண்ட வாலும், இரு கோடுகளும் உடைமையோடு, கன்று ஈன்று பால் தருவது பசு என்ற வழியே அதன் இலக்கணம் முழுமை பெறுகிறது. இந்த முழுமையான இலக்கணத்தைப் பெற, எத்தனையோ ஆண்டுகளைக் கடக்க நேர்ந்திருக்கும்.

இலக்கணத் தோற்றத்தின் இவ்வுண்மை நிலையைக் கருத்தில் வைத்து நோக்கின், ஒரு மொழிக்கு முழுமை பெற்ற ஒர் இலக்கணம் ஒன்று அமைந்துவிட்டது என்றால், அவ்விலக்கணத்திற்கு இலக்கியமாய் அமைந்த பாட்டும் உரையும், அவ்விலக்கணம் எழுதப்படுவதற்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே, ஏன் சில ஆண்டுகளுக்கு முன்னரே, தோன்றி முழுமை பெற்றிருக்க வேண்டும். மொழித் தோற்றத்து இந்நிலையைத், திருவாளர். பி, டி. எஸ் அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளார். அகஸ்தியரும், அவர் மாணவரும் வியத்தகு நிலையில் துல்லியமாக இலக்கணத்தை வகுத்துத் தந்துள்ளனர் என்றால், கிறித்துவ ஆண்டுத் தோற்றத்திற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழில் மிகப் பரந்த இலக்கியப் பாக்கள் புனையப்பட்டிருக்க வேண்டும்’ என அவர் கூறுவது காண்க.

“A vast amount of Tamil literature must have been composed during these five centuries; otherwise, Agattiyanar and Tolkappiyanar, could not have composed their wonderfully accurate grammars of the Tamil language” (page : 162)

ஆக, தொல்காப்பியர், தமிழ் எழுத்துக்களின் ஒலி வடிவத்திற்கு மட்டுமல்லாமல், வரிவடிவத்திற்கும் இலக்கணம் வகுத்துள்ளார் என்றால், தவறு; அவர் வகுக்கவில்லை; அவருக்கு முன் வாழ்ந்திருந்த (எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் என்பது அறியப்படாத ஒன்று) இலக்கண ஆசிரியர்கள் வகுத்த இலக்கணத்தைத்தான், தம் எழுத்தால் எடுத்து வடித்துள்ளார் என்றால், தமிழ் எழுத்துருவம் பெற்றது, தொல்காப்பியர் காலத்துக்கும், அவர் மதிக்கும், எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் எனக் காலக்