பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழமை புதுமைகளின் இணைப்பு

505


ஏனை உயிரோடு உருவு திரிந்து உயிர்த்தலும்

ஆயீரியல உயிர்த்தலாறே”

(17)

சொல்லின் ஈற்றில் வரும் மெய், புள்ளிபெற்றே வருதல் வேண்டும்.

“மெய்யிறெல்லாம் புள்ளியொடு நிலையல்”

(105)

உயிர்மெய்யெழுத்திலிருந்து உயிரெழுத்து பிரிந்து விடுமாயின், மெய்யெழுத்து, தனக்குரிய புள்ளிபெறுதலாம் இயல்புக்கு ஏற்ப, புள்ளியைப் பெற்று விடும்.

“மெய், உயிர் நீங்கின் தன்னுருவாகும்”

(140)

ஆக, தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே, தமிழ் எழுத்து வரிவடிவம் பெற்றுவிட்டது என்பது, இதனால் உறுதி ஆகிறது. தொல்காப்பியர் காலத்துக்கு எத்தனை காலத்துக்கு முன்னர் த், தமிழ் அவ்வரிவடிவைப் பெற்றிருக்க இயலும் தொல்காப்பியத் தில் அவர் கூறும் இலக்கணம், அவரே வகுத்துத் தந்தது அன்று; அவருக்கு முன்னர் வாழ்ந்திருந்த இலக்கண ஆசிரியர்கள் வகுத் துத் தந்த இலக்கணத்தைத் தான், தொல்காப்பியர் தம்முடைய நூலில் ஏற்றுக் கூறியுள்ளார்; தொல்காப்பியச் சூத்திரங்களில் இடம் பெற்றிருக்கும், “என்ப”, “என்மொழிப”; “என்மனார் புலவர்”, “நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே” என்பன போலும் சொற்களும், சொற்வொடர்களும் அதை உறுதி செய்வது உணர்க.

இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்ப. நான்கு கால்கள் உடையது பசு என்றால், அது, பசுவுக்குரிய முழு இலக்கணம் ஆகிவிடாது. நான்கு கால்கள் உடையன வேறு விலங்குகளும் இருப்பதால், நான்கு காலும் ஒரு வாலும் உடையது பசு என்பதும் நிரம்பிய இலக்கணம் ஆகாது, ஆட்டுக்கும் வால் உடைமையால், அதுவும் பொருந்தும் இலக்கணம் ஆகாது. நான்கு கால்களும், நீண்டவாலும், உடையது பசு என்பதும், முழுமையான இலக்கணம் ஆகாது.