பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழமை புதுமைகளின் இணைப்பு

519


மாறிவிட்ட ஆரிய சமய நெறியைத் தமிழர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டுவிட்ட காலகட்டத்தைச் சேர்ந்தது. இந் நூலில், தமிழ் முருக வழிபாட்டு நெறி அழிவுற்றுப் போய் ஆரிய சண்முக வழிபாட்டு நெறியோடு கலந்துவிட்ட நிலையினைக் காணலாம். [This poem belongs to the eve of the final absorptions of Aryanism by the Tamils, when the Tamil Murugan had just been identified with the Aryan Sixfaced Karthikeya, fosterchild of the stars of the P'eiades. In it, we can notice the dying Tamil rite of worship coalescing with the rite of the Aryan worship of Shanmuka, Page : 557-558.]

பெரும்பாணாற்றுப்படை : பாம்பணைப் பள்ளியில் அமர்ந்திருக்கும் திருமால் காட்சி இடம் பெற்றிருக்கும் ( நீடு குலைக், காந்தளம் சிலம்பில் களிறு படிந்தாங்குப் பாம்பனைப் பள்ளி அமர்ந்தோன்'” (371-73) என்ற வரிகளை எடுத்தாண்டு காட்டிவிட்டு, பாம்பனைப்பள்ளி மீது விஷ்ணு அமர்ந்திருப்பதைக் குறிப்பிடும் இதுதான், தமிழ் இலக்கியங்களின் முதல் குறீப்பீடாகும். [Kanhi, where the god slept on the serpent couch, like an elephant resting on a hill where grows the gloriosa superha, This is the earliest reference in Tamil literature to the worship of Vishnu stretched on his serpent couch” page: 391-392.]

முல்லைப்பாட்டு : இந்தப் பாட்டிலும், ஆரியக் குறிப்பீடுகள், இங்கொன்றும், அங்கொன்றுமாக அல்லாமல் எண்ணற்றனவாம். [In this poem also, the Aryan allusions are not casual, but intimate. pege : 542.]

மதுரைக்காஞ்சி : மதுரை நகரில் ஆரிய ஆகமநெறி வழிபாட்டு முறைகள் விரைந்து பரவியதற்கான எண்ணற்ற அகச்சான்றுகள் நாம் பெறலாம். [We get evidence of the rapid spread of the Agama cults in the town of Madura. page : 450.]