பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழமை புதுமைகளின் இணைப்பு

539

‘சிற்றரசர்கள் புகழ்பாடும் சங்கச்செய்யுட்களில், வேள்வி தொடர்பான செய்திகள் இடம் பெற்றிருக்கும், “நெய்ம்மலி ஆவுதி பொங்கப் பன்மாண் வீயாச் சிறப்பின் வேள்விமுற்றி” (புறம் : 15), “அந்தணர் அருங்கடன் இறுக்கும் முத்தீ” (புறம் : 2), “கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த வேள்வித் தூண்”. “முனிவர், வெண்கோட்டுக் களிறுகரு பிறகின் வேட்கும்” (பெரும் பாண் 315-317 : 499), “அழல் புரித்தலு உம் அந்தணர்” (புறம்: 122) என்பனபோலும் பாடல்வரிகளை அடுக்கடுக்காக எடுத்துக்காட்டி, அவை இடம் பெற்றிருக்கும். அப்பாக்கள் எல்லாம், கி. பி. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தனவே என்ற தம் முடிவிற்கு அரண்தேட முயன்றுள்ளார், திருவாளர் அய்யங்கார் அவர்கள்.

ஆனால், பாட்டுடைத் தலைவன் புகழ்பாடும் பாடாண் திணைத்துறைகளுள், ஒன்றாக. வேள்விமுடிவில், வேள்வி ஆசிரியனுக்குப் பசுக்களைத் தானமாகக்கொண்டும். பெருஞ் செயலைப் பாராட்டும், “கபிலை கண்ணிய வேள்வி நிலை” (தொ. பொ 87) என்ற துறையையும் ஒன்றாக வைத்து, வேள்விகள், தமிழகத்தில் தம் காலத்திற்கு முன்பே நிலை கொண்டு விட்டன : ஆகவே, அவை இடம் கொண்டிருக்கும் சங்க இலக்கியப் பாடல்கள் தம் காலத்திற்கு முற்பட்டனவே என்பதை முடித்து வைத்துள்ளார் தொல்காப்பியர்.

சங்க இலக்கியங்களில், ஞாயிறும், திங்களும் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. செவ்வாய், “செம்மீன்” (புறம் 60) என்ற பெயரிலும், வெள்ளி, “வைகுறுமீன்” (பெரும்பாண் : 318), “வெண்மீன்” (பட்டி : 1) என்ற பெயர்களிலும், சனி, “மைம்மீன்” (புறம் : 117) என்ற பெயரிலும் இடப்பெற்றுள்ளன.

அதுபோலவே, கார்த்திகை, “அறுமீன்” (அகம் : 141) “ஆரல்” (மலைபடு : 200) என்ற பெயர்களிலும், உரோகிணி, “சகடம்” (அகம் ; 136) என்ற பெயரிலும், புனர்பூசம், “கடைக் குளம்” என்ற பெயரிலும், அனுடம், “முடப்பணை”