பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலன் 75

  அதேபோல், பாண்டிநாட்டு வேட்டுவர், தம் நிலத் தெய்வமாம் கொற்றவையை வழிபடப் பாடிய வரிப் பாட்டின் இறுதியில் தங்கள் நாடாளும் பாண்டியனை வாழ்த்துங்கால், பெயர்கூறி வாழ்த்தாது, பாண்டியர் குலத்தவர்க்கு உரிய மலையாம் பொதிகைமலை கூறி, அதற்கு உரியோன் என்ற தொடரால் குறிப்பிட்டு வாழ்த்தி இருப்பது காண்க.
  பொறை உயர் பொதியில் 
  பொருப்பன்், பிறர் நாட்டு கட்சியும் கரந்தையும் பாழ்பட வெட்சி சூடுக விறல் வெய்யோனே’.

--வேட்டுவ வரி,

  அதேபோல், மதுரை மாநகரத்து ஆயர் குல மகளிர், பால் உறையாமை போலும் உற்பாதத்தால், தங்கள் ஆயர் பாடியில் அடைக்கலம் புகுந்திருக்கும் கண்ணகிக்கும் கோவலனுக்கும் கேடு வராமை வேண்டி ஆடிய குரவைக் கூத்தின் இறுதியில், மன்னனை வாழ்த்தும் மரபையொட்டி மாநகரத்து மன்னனை வாழ்த்துங்கால் அக்காலை அரசு கட்டிலில் அமர்ந்திருக்கும் அரசன் பெயர் கூறி வாழ்த்தாமல், இந்திரன் முடிஅழித்த தொடித்தோள் தென்னவனாம் பாண்டியர் மரபு முதியோன் பெயரே கூறி வாழ்த்தியிருப்பது காண்க.
" வெற்றி விளைப்பது மன்னோ, கொற்றத்து

இடிப்படை வானவன் முடித்தலை உடைத்த தொடித்தோள் தென்னவன் கடிப்பிடு முரசே’.

-ஆய்ச்சியர் குரவை:

  அதேபோல் சேர நாட்டு மலைக்குரவர், கண்ணகி கணவனோடு கூடி வானாடு அடைந்த வியத்தகு நிகழ்ச்சியால் மகிழ்ந்து, தாம் வழிபடும் மலைநாட்டுக் கடவுளாம். முருகவேளை வழிபடும் குரவைக் கூத்து மேற்கொண்டு முருகன் புகழைப் பலபடப் பாடி மகிழ்ந்த பின்ன்ர், விழா முடிவில், நாடாளும் மன்னனை வாழ்த்தும் மரபினையொட்டி,